Connect with us

latest news

அதிகமா வீடியோ கால் பேசுபவரா நீங்கள்… வாட்ஸ்அப் கொண்டு வந்த சூப்பர் அப்டேட்… எப்படி ஆக்டிவேட் செய்வது..?

Published

on

வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு குறைந்த வெளிச்சத்தில் வீடியோ அழைப்புகளின் தரத்தை மேம்படுத்தி புதிய லோ லைட் பயன்பாட்டு முறையை அறிமுகம் செய்திருக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் யாருமே கிடையாது. முன்பெல்லாம் செல்போன்கள் அறிமுகமான காலத்தில் ஸ்மார்ட்போன்கள் என்பதை யாரோ ஒருவர் மட்டுமே வைத்திருப்பார்கள். மற்றவர்கள் பெரும்பாலும் பட்டன் செல்போன்களை பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் நாகரீகம் வளர வளர ஸ்மார்ட் ஃபோன்களின் தேவை அதிகரித்து விட்டது.

அதிலும் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், twitter, google pay, phonepay என்று பல ஆப்புகள் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தங்களுக்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் வாட்ஸ் அப்பை கட்டாயம் பயன்படுத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து தங்களின் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகின்றது. தற்போது லோ லைட் வீடியோ கால் ஆப்ஷன் என்ற whatsapp அப்டேட்டை செய்திருக்கின்றது. இது மங்களான வெளிச்சத்தில் கூட வீடியோ அழைப்புகளை மேம்படுத்த முடியும். whatsapp ஒரு புதிய தனித்துவமான அம்சத்தை கொண்டு வந்திருக்கின்றது. வீடியோ அழைப்புகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும்.

வாடிக்கையாளர்கள் இப்போது வீடியோ அழைப்பின் போது குறைந்த வெளிச்சப் பயன்முறையை பயன்படுத்த முடியும். இந்த அம்சம் குறைந்த வெளிச்ச அமைப்புகளில் வீடியோவின் தரத்தை மேம்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. குறைந்த வெளிச்ச பயன்முறையானது குறைந்த வெளிச்ச சூழலில் அழைப்பின் போது வீடியோ தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது முகத்தில் கூடுதல் வெளிச்சத்தையும், குறைந்த கிரியேன்ஸ்-யும் தரும். இது இருட்டில் வீடியோவை தெளிவாக காட்ட பயன்படுத்தப்படுகின்றது. வெளிச்சம் குறைவாக இருந்தாலும் முகம் தெளிவாக நமக்கு தெரியும். இந்த வாட்ஸ் அப்பில் குறைந்த வெளிச்சப் பயன்முறையை எப்படி இயக்குவது என்பதை குறித்து இதில் பார்ப்போம்.

குறைந்த வெளிச்ச பயன்முறையை தொடங்குவது என்பது மிகவும் எளிதானது.

  • வாட்ஸ் அப்பை முதலில் திறக்க வேண்டும்.
  • வீடியோ அழைப்பு செய்ய வேண்டும்.
  • உங்கள் வீடியோ பீடை முழுத்திரையில் விவரிக்கவும்.
  • குறைந்த வெளிச்ச பயன்முறையை செயல்படுத்த மேல் வலது புறத்தில் உள்ள பல்பு ஐகானை தட்டவும். இந்த அம்சத்தை முடக்குவதற்கு மீண்டும் பல்ப் ஐகானை தட்ட வேண்டும்.
  • இந்த அமைப்பானது உங்களுக்கு தேவைக்கேற்ப இதனை விரைவாக இயக்கம்/முடக்க முடியும்.

குறைந்த வெளிச்சப் பயன்முறையை ஒவ்வொரு அழைப்பிற்கும் செயல்படுத்தலாம். ஏனென்றால் தற்போது அதை நிரந்தரமாக இயக்க எந்த விருப்பமும் இல்லை.

google news