Cricket
நியூஸிலாந்து இன்…இந்தியா அவுட்…பின் தங்கிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி…
இருபது ஓவர் உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமீரகத்தில் வைத்து நடந்து வருகிறது. துபாயில் நேற்று நடந்த பாகிஸ்தான் – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி ஒன் சைடு கேமாகவே மாறியது.
பாகிஸ்தான் அணியை எளிதில் வென்றதன் மூலம் அரை இறுதிக்குள் நுழைந்தது நியூஸிலாந்து அணி. இந்த இரு அணிகளும் குரூப் ஏவில் இடம் பெற்றிருந்ததன. இந்த ஆட்டத்தின் முடிவால் இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
தனது கடைசி ஆட்டத்தில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தோடு பலம் பொருந்திய ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி. உலகக் கோப்பை அரை இறுதி கனவோடு காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தரும் விதமாகவே இந்திய அணியின் ஆட்டம் அமைந்தது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் நூற்றி ஐம்பத்தி ஓரு ரன் களை குவித்தது, கட்டாய வெற்றியை எதிர் நோக்கி தனது சேஸிங்கை துவங்கிய இந்திய அணி நூற்றி நாற்பத்தி இரண்டு ரன் களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவியது. இதனால் அரை இறுதியில் நுழையும் வாய்ப்பு மங்கியது.
பாகிஸ்தான் – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் முடிவே அரை இறுதியில் நுழையப்ப்போகும் அணி எது என்ற கேள்விக்கு பதில் தரும் போட்டியாக இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது நியூஸிலாந்து அணி.
முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அனி இருபது ஓவர் நிறைவில் நூற்றி பத்து ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது. நூற்றி பதினோறு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் ஐம்பத்தி ஆறு ரன் ளுக்கு பத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
பதினோறு புள்ளி நான்கு ஓவர்களில் ஆல்-அவுட் ஆனது பாகிஸ்தான்.
நியூஸிலாந்தின் இந்த வெற்றியால், அரை இறுதி வாய்ப்பை இழந்து, நடப்பு உலக் கோப்பை தொடரை விட்டே வெளியேற்றப் பட்டது இந்திய அணி.
இருபது ஓவர் உலகக் கோப்பையை இந்திய ஆடவர் அணி வென்று சாதனை படைத்ததை போலவேம் மகளிர் அணியும் சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூஸிலாந்து அணி க்ரூப் – ஏ விலிருந்து அரை இறுதிக்கு தகுதியான இரண்டாவது அணியாக மாறியது. இந்தியாவுடனான போட்டியில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அரை இறுதிக்கு க்ரூப் – ஏவிலிருந்து தகுதி பெற்றிருந்தது.