Connect with us

govt update news

ஆதார் கார்டு தெரியும்… அது என்ன அபா கார்டு… இதுல இவ்வளவு விஷயம் இருக்கா…?

Published

on

அபா கார்டு என்றால் என்ன என்பது குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

மக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அபா கார்டு வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் சுகாதார பாதுகாப்பு அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் இந்திய அரசால் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இனி வங்கி கணக்கை போலவே ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமாக சுகாதாரக் கணக்கு இருக்க வேண்டும். இதில் நம்முடைய முழு மருத்துவ வரலாறும் சேமிக்கப்பட்டு வரும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் மூலம் இந்த வசதி செய்யப்படுகின்றது. இதை தான் அபா கார்டு என்று அழைத்து வருகிறார்கள். அபா கார்டு என்பது ஒரு டிஜிட்டல் ஹெல்த் ஐடி கார்டு ஆகும். இது உங்கள் உடல் நலம் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேமிப்பதற்கு உதவுகின்றது. இந்த கார்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிப்பட்ட 14 இலக்கு எண் இருக்கும்.

இது ஆதார் கார்டை போலவே அனைவருக்கும் தனியாக வழங்கப்படும் ஒரு கார்டு. நோயாளிகளின் மருத்துவ வரலாற்றை பாதுகாப்பாகவும், எளிதாக்கவும் அணுகுவதற்கு இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதை ஸ்கேன் செய்யும் போது மருத்துவர் உங்களின் மருத்துவ வரலாற்றை எளிதில் படித்துக் கொள்ள முடியும். இதற்கு நோயாளிகளுக்கு ஐடி மற்றும் பாஸ்வேர்ட் தேவைப்படும்.

இது அபா கார்டு வைத்திருப்பவர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும். இந்த வசதியின் மூலம் வேறு ஆவணங்கள் எதுவும் இல்லாமல் நோயாளியின் மருத்துவ தகவல்களை மருத்துவர்கள் எளிதில் படித்துக் கொள்ள முடியும். ஆயுஷ்மான் கார்டுக்கும், அபா கார்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ஆயுஷ்மான் கார்டு மூலம் 5 லட்சம் வரை இலவச பயணமில்லா சிகிச்சையை பெறுவீர்கள்.

அபா கார்டு வெறும் மருத்துவ விவரங்களை சேகரித்து வைப்பதற்கு பயன்படுத்தப்படும் கார்டு ஆகும். இதற்கு சிறப்பு தகுதி எதுவும் கிடையாது. இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அதை வாங்குவதற்கு முடியும். அருகில் உள்ள சுகாதார மையம் அல்லது அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு இந்த கார்டை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

சுகாதார அமைப்பை டிஜிட்டல் மையம் ஆக்குவதற்கும், குடிமக்களின் மருத்துவ தகவல்களை பாதுகாப்பான முறையில் சேமித்து வைப்பதற்கும் பெருமளவு உதவுகின்றது. தற்போது ஒவ்வொரு குடிமகனும் தங்கள் உடல்நல கணக்கை எளிதாக உருவாக்கி அதில் தங்களின் உடல்நல தொடர்பான அனைத்து விஷயங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *