Finance
மறுபடியும் மொதல்ல இருந்தா?…மீண்டும் தலை தூக்கிய விலை உயர்வு!…தங்கம் இன்று…
கடந்த இரண்டு நாட்களாகவே இறங்குமுகத்தில் இருந்து வந்தது தங்கத்தின் விற்பனை விலை. சென்னயில் நேற்று விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ஏழாயிரத்து தொன்னூற்றி ஐந்து ரூபாயாகவும் (ரூ7,095/-), சவரன் ஒன்றிற்கு ஐம்பத்தி ஆறாயிரத்து எழனூற்றி அறுபது ரூபாய்க்கும் (ரூ.56,760/-) விற்கப்பட்டு வந்தது.
இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அடுத்தடுத்த இரண்டு நாட்கள் இருந்து வந்தது நகை பிரியர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. ஆனால் இது தற்காலிக சந்தோஷம் தான் என்பதனை இன்று நிரூபித்து விட்டது தங்கம் விலை உயர்வு பாதைக்கு மீண்டும் செல்லத்துவங்கியதன் மூலம்.
கிராம் ஒன்றுக்கு ஏழாயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்ட தங்கம் படிப்படியாக மேலும் உயரத்துவங்கியது. இன்று சென்னையில் விற்கப்பட்டு வரும் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு நாற்பத்தி ஐந்து ரூபாயும் (ரூ.45/-), சவரன் ஒன்றிற்கு முன்னூற்றி அறுபது ரூபாயும் (ரூ.360/-) உயர்ந்தே காணப்படுகிறது.
இந்த விலை உயர்வின் படி இருபத்தி இரண்டு கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஏழாயிரத்து நூற்றி நாற்பது ரூபாயாக (ரூ.7,140/-) உள்ளது. அதே போல ஒரு சவரனின் விலை ஐம்பத்தி எழாயிரத்து நூற்றி இருபது ரூபாயாகவும் (ரூ.57,120/-) இருந்து வருகிறது. வெள்ளியின் விலையில் நேற்று எந்த வித மாற்றமும் தென்படவில்லை, அதே நிலை தான் இன்றும் நீடிக்கிறது.
நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை நூற்றி மூன்று ரூபாயாக (ரூ.103/-) இருந்தது, ஒரு கிலோ பார் வெல்ளியின் விலை ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாயாக (ரூ.1,03,000/-) இருந்தது. மாற்றம் ஏதுமின்றி அதே விலையில் தான் இன்றும் விற்கப்படுகிறது வெள்ளி.