Connect with us

Cricket

அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்…சுவாரஸ்மான கட்டதிற்கு நகரும் பெண்கள் உலக் கோப்பை…

Published

on

Women Cricket Team

பெண்களுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. அரை இறுதியில் மோத நான்கு அணிகள் தேர்வாகியுள்ளது. இதனால் பெண்கள் உலகக் கோப்பையில் அடுத்து வரயிருக்கும் போட்டிகள் ரசிகர்ளுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது.

ஆஸ்திரேலியாவுடனான தோல்வியை அடுத்து இந்திய அணியின் அரை இறுதிக் கனவு மங்கியது. இந்நிலையில் அரை இறுதி போட்டிகள் நாளை முதல் துவங்க உள்ளது. பெண்களுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு எமீரகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.

க்ரூப் – ஏ, க்ரூப் – பி என இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து முடிந்தது. அரையிறுதிக்கு தகுதி பெறும், கோப்பையை வெல்லும் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. ஆஸ்திரேலியாவுடனான முக்கிய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் விளையாடிய இந்தியா தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது.

இதனால் நியூஸிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவுக்கு காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. நியூஸிலாந்து, பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல் இந்திய அணியின் அரை இறுதிக் கனவையும் தகர்த்து எரிந்து அரை இறுதிக்கு முன்னேறியது. க்ரூப் -ஏ விலிருந்து ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தேர்வாகியுள்ளது. மற்றொரு க்ரூப் ஆன பி -குரூப்பிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியும், தென்னாப்பிரிக்கா அணியிம் தேர்வாகியுள்ளது.

இறுதிப் போட்டி வருகிற இருபதாம் தேதி துபாயில் வைத்து நடைபெற இருக்கும் நிலையில் , அரை இறுதிப் போட்டிகள் நாளை துவங்குகிறது. முதலாவது அரை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணியை தென்னாப்பிரிக்க அணி இந்திய நேரப்படி இரவு ஏழு முப்பது மணிக்கு துவங்க இருக்கும் போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது.

மற்றொரு அரை இறுதிப் போட்டி நாளை மறுநாள் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் மோத உள்ளது. இந்த போட்டியும் இந்திய நேரப்படி இரவு ஏழு முப்பது மணிக்கு துவங்க இருக்கிறது. இந்த நான்கு அணிகளுமே சமபலம் பொருந்திய அணிகளாகவே பார்க்கபடுகிறது.

இதனால் முந்தைய சுற்றினை விட அடுத்து நடக்கயிருக்கும் போட்டிகள் சுவாரஸ்யமானதாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.

Australian Women Team

Australian Women Team

ஆனால் உலகக் கோப்பை போட்டிகள் என வந்து விட்டால் அது ஆண்கள் அணியாக இருந்தாலும் சரி, பெண்கள் அணியாக இருந்தாலும் சரி ஆஸ்திரேலியா அசுர பலத்தோடு களமிறங்கி எதிரணியை நிலைகுலைய வைத்து வந்திருக்கிறது முந்தைய நாட்களில் நடந்தப் போட்டிகளில். இதனால் அந்த அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *