latest news
மீண்டும் மோட்டரோலா மொபைல்கள்!…எட்ஜின் மூலம் எண்ட்ரி?…
மொபைல் போன்கள் அறிமுகமான காலத்தில் அதிக பேரின் கைகளில் ஒட்டியிருந்த சில நிறுவன போன்கள் இந்திய மொபைல் மார்க்கெட்டில் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விற்பனையில் எண்ணிக்கை குறையத் துவங்கயது. சீமன்ஸ், மோட்டரோலா கம்பெனி தயாரிப்புகள் எல்லாம் இந்தியா மட்டுமன்றி, உலகம் முழுவதும் பயன்பாட்டில் அதிக அளவில் இருந்து வந்தது.
நோக்கியா, சாம்சங், மைக்ரோ மேக்ஸ் கம்பெனி போன்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக அதன் சிறப்பு அம்சங்களால் கவர்ந்து இழுக்கத் துவங்கியது. அதன் பின்னர் தான் உலகம் முழுவதும் அறிமுகமானது ஸ்மார்ட் போன்கள், கம்புயூட்டருக்கு நிகரான பயன்பாட்டினை இந்த கண்டுபிடிப்பு வழங்கத் துவங்கியது.
இதனால் சர்வதேச மொபைல் சந்தையில் செல்போன்களின் சேல்ஸ் சூடுபிடிக்கத் துவங்கியது. முன்னனி நிறுவனங்களோடு, போட்டி போட மற்ற நிறுவனத் தயாரிப்புகளும் களத்தில் குதித்தது. இதனால் சாய்ஸ் ஆப்ஷன் வாடிக்கையாளர்களுக்கு அதிகரித்தது.
ஒரு காலத்தில் இந்திய மொபைல் மார்க்கெட்டில் பீக் சேல்ஸில் இருந்து வந்த மோட்டரோலா திடீரென தனது ஸ்பீடை இழந்தது விற்பனையில்.
அடுத்த ஆண்டு களமிறக்கப்படும் என எதிர்பார்க்கபடும் நிலையில் பல்வேறு ஸ்பெஷல் ஃப்யூச்சர்களை கொண்ட மோட்டரோல எட்ஜ் பெஸ்ட் மொபைல் மாடல், இந்திய சந்தையை ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்லீக் மற்றும் ஸ்டைலிஸ் மாடலாக தனது என்ட்ரியை கொடுக்க தயாராகி வருகிறது மோட்டோ எட்ஜ் மாடல். 300எம்பி கேமரா, இருபத்தி நாலு ஜிபி ரேம், ஆறாயிரத்து அறனூறு ஏஹைச் பேட்டரி என இதன் ஃப்யூச்சர்ஸ் திருப்தி தரக் கூடிய விதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
6.82 இன்ச் டிஸ்ப்ளே, தோராயமாக ஐம்பத்தி ஐந்து நிமிடத்தில் முழுமையான பேட்டரி சார்ஜிங், 8ஜிபி, 12ஜிபி,16ஜிபி ரேம் என மூன்று வேரியன்ட்களாக களமிறங்க காத்திருக்கிறது.
முப்பத்தி நாலாயிரத்து தொல்லாயிரத்து தொன்னூற்றி ஒன்பது ரூபாய் (ரூ.34,999/-) முதல் நாற்பத்தி நாலாயிரத்து தொல்லாயிரத்து தொன்னூற்றி ஒன்பது ரூபாய் (ரூ.44,999/-) வரை இருக்கலாம் இதன் விலை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
300மெகா பிக்ஸல் கொண்ட மெயின் கேமரா, 6,600ஏஹைச் பேட்டரி, 7,200 திறன் ப்ராஸசர், 32எம்பி அல்ட்ரா வொயிட், 13எம்பி டெலிபோட்டோ லென்ஸ், அதிக சூம் கெபாசிட்டி, 50எம்பி செல்ஃபீ கேமரா என கவர்ந்திழுக்கும் அம்சங்களை கொண்ட மோட்டோ எட்ஜ் நியூ இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கபடுகிறது.