ஆதார் எண் இருந்தால் மட்டும் போதும்… நீங்க ஏடிஎம்கே போகத் தேவையில்லை… அது எப்படி..?

ஆதார் அட்டையை பயன்படுத்தி ஏடிஎம்-க்கு செல்லாமல் பணத்தை எடுக்கும் அசத்தலான வசதி குறித்து இந்த தொகுப்பில் நாம் விரிவாக பார்ப்போம்.

வங்கிகள் என்பது மக்களுக்கு ஏராளமான சேவைகளை கொடுத்து வருகின்றது. அதிலும் இன்றைய சூழலில் மக்களுக்கு வங்கிகள் என்பது இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. பலவிதமான புதிய வசதிகளையும் மக்களுக்கு ஏற்றார் போல் வங்கிகள் கொடுத்து வருகின்றன. பொதுவாக வங்கிகளில் கணக்குகளை தொடங்கிய பிறகு நமக்கு ஏடிஎம் கார்டு என்பது வழங்கப்படுகின்றது.

இதன் மூலமாக மக்கள் பேங்குக்கு செல்லாமல் அருகில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு சென்று தங்களுக்கு வேண்டிய பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக வங்கிகள் இது போன்ற ஏடிஎம் கார்டை தயாரித்து வழங்கியிருக்கின்றது.

வங்கிகளைப் போல் வேலை நேரங்களில் மட்டும் இல்லாமல் 24 மணி நேரமும் பணத்தை நாம் ஏடிஎம்மில் இருந்து எடுத்துக் கொள்ள முடியும். ஏடிஎம் கார்டுகள் இருந்தாலும் மக்கள் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பெருமளவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஆதார் எண் இருந்தாலே போதும் நாம் பணத்தை பெறலாம் என்கின்ற ஒரு வசதி உள்ளது. அதன்படி ஆன்லைன் ஆதார் ஏடிஎம் சேவையை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே நாம் பணத்தை எடுக்க முடியும்.

ஒருவர் தனது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து பயோமெட்ரிக் தரவுகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என கூறப்படுகின்றது. இதனை தான் ஆதார் இயக்கப்பட்ட பணம் செலுத்தும் முறை என கூறப்படுகின்றது. இதன் மூலம் வங்கிகளுக்கு நாம் செல்ல தேவையில்லை. குறைந்த அளவு பணத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். ஏடிஎம் இல்லாத இடங்களில் மக்களுக்கு ரொக்க பண தேவை என்பதை பூர்த்தி செய்வதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதற்கு ஏஇபிஎஸ் செயல்முறையை ஆதரிக்கும் மெட்ரோ ஏடிஎம்மில் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். இதைத்தொடர்ந்து பயோமெட்ரிக் சரிபார்ப்பு செயல்முறையை கைரேகை ஸ்கேனர் மூலம் பதிவு செய்தால் போதும் அங்கீகரிக்கப்பட்ட வங்கி சேவையுடன் ஆதார் அட்டையை பொருத்தி, மைக்ரோ ஏடிஎம்மில் ஆதார் எண்ணை இணைத்து பின்னர் பணம் எடுத்தல் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நமக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்பதை உள்ளிட்ட பிறகு வங்கியின் முகவர் அந்த பணத்தை நம்மிடம் கொண்டு வந்து கொடுப்பார். இந்த வங்கி கணக்கில் இருந்து பிறகு பணம் டெபிட் செய்யப்படும் ஏடிஎம் இல்லாத இடங்களில் அல்லது பணம் எடுக்க வசதி இல்லாத இடங்களில் இது நமக்கு உதவிகரமாக இருக்கும்.

Leave a Comment