Connect with us

latest news

எல்லாமே இலவசம்.. காசில்லாம கண்டுகளிக்கலாம்.. பிரபல ஓடிடி-யின் பயங்கரமான ஆஃபர்

Published

on

ஓடிடி துறையில் பிரபல நிறுவனம் லயன்ஸ்கேட் பிளே. ஹாலிவுட் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் ஏராளமான நிகழ்ச்சிகளை வழங்கும் லயன்ஸ்கேட் பிளே அசத்தலான ஆஃபர் ஒன்றை அறிவித்து இருக்கிறது. இந்த ஆஃபரின் கீழ் பயனர்கள் லயன்ஸ்கேட் பிளே தளத்தை ஒருவார காலத்திற்கு இலவசமாக கண்டுகளிக்க முடியும்.

இந்த ஆஃபர் ‘கேட்கிராஷ் லயன்ஸ்கேட்’ என்ற பெயரில் விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆஃபரின் கீழ் பயனர்கள் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் ஏழு நாட்களுக்கு லயன்ஸ்கேட் பிளே தளத்தில் உள்ள திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை இலவசமாக கண்டுகளிக்க முடியும்.

கேட்கிராஷ் லயன்ஸ்கேட் விளம்பர திட்டத்தின் கீழ் ‘Paris Has Fallen’ தொடர் வெளியாகிறது. இதுதவிர ஒவ்வொரு வாரமும் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாக உள்ளன. இந்த விளம்பர திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க இரண்டு நகைச்சுவை விளம்பரங்கள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பரத்தை ஹவாஸ் மீடியா எடுத்துள்ளது.

ஏழு நாட்களுக்கு இலவச சந்தா வழங்கப்படும் நிலையில், அக்டோபர் 24 ஆம் தேதி முதல் லயன்ஸ்கேட் பிளே பயன்படுத்த சந்தா செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அக்டோபர் 18 முதல் 24 ஆம் தேதி வரை சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்படங்களை பயனர்கள் கண்டுகளிக்க முடியும்.

google news