latest news
பிராசஸரில் டுவிஸ்ட் வைத்த ஆப்பிள்.. புதிய ஐபேட் மினி வாங்கலாமா, வேண்டாமா?
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபேட் மினி 7 மாடல் சில நாட்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபேட் மினி மாடல்களில் முற்றிலும் புதிய சக்திவாய்ந்த பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபேட் மினி 7 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ17 ப்ரோ சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இதே பிராசஸர் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.
சக்திவாய்ந்த பிராசஸராக அறியப்படும் ஏ17 ப்ரோ 6-கோர் ஜிபியு உள்ளது. எனினும், தற்போது புதிய ஐபேட் மினி மாடலில் வழங்கப்பட்டுள்ள ஏ17 ப்ரோ சிப்செட் 5-கோர் ஜிபியு கொண்டிருக்கிறது. இது பெயரளவில் ஒரே பிராசஸர், ஆனால் செயல்திறன் அடிப்படையில் சற்றே குறைந்த திறன் கொண்டிருக்கும்.
புதிய ஐபேட் மினி 7 மாடலில் 6-கோர் சிபியு மற்றும் 16 கோர் நியூரல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டு வெளியான ஐபோன்களில் வழங்கப்பட்ட பிராசஸர் தான். இதனால் பயனர்கள் கடந்த ஆண்டு அறிமுகமான ப்ரோ மாடல் ஐபோன்களுக்கு நிகரான ஏஐ மற்றும் செயல்திறனை புதிய ஐபேட் மினி மாடலிலும் பெற முடியும். ஆனாலும், புதிய ஐபேட் மினி மாடலில் 5-கோர் ஜிபியு தான் உள்ளது. இது கிராஃபிக்ஸ்-ஐ இயக்க சற்று குறைந்த திறன் வழங்கும்.
அம்சங்களை பொருத்தவரை ஐபேட் மினி 7 மாடலில் 8GB ரேம், புதிய ஏஐ அம்சங்கள், அதிநவீன அம்சங்களை வழங்கும் ஐஓஎஸ் 18.1 வழங்கப்படுகிறது. இவைதவிர புதிய ஐபேட் மினி மாடலும் மெல்லிய டிசைன், 8.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, டச் ஐடி சென்சார், ஆப்பிள் பென்சில் ப்ரோ சப்போர்ட் வழங்கப்படுகிறது.