Connect with us

govt update news

பொங்கலுக்கு ஊருக்கு போக ட்ரெயின் டிக்கெட் புக் பண்ண போறீங்களா..? அப்ப இத தெரிஞ்சிட்டு போங்க..!

Published

on

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் முக்கிய மாற்றத்தை இந்தியன் ரயில்வே கொண்டு வந்திருக்கின்றது. இது தொடர்பான விவரங்களை நாம் தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் இருக்கும் பொதுப் போக்குவரத்து துறையில் மிக முக்கிய ஒன்று இரயில். நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு மக்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது ரயில் பயணங்களை தான். இதற்கு காரணம் பயணச் செலவு, நேரம் உள்ளிட்டவை குறைவு என்பதால் தான். மிகக் குறைந்த கட்டணத்தில் டிராபிக் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் சௌகரியமாக செல்ல முடியும் என்பதால் ரயிலில் பயணிப்பதை பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள்.

ரயிலில் பயணம் செய்வதற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது முக்கியமானது. முன்கூட்டியே புக்கிங் செய்வதால் ரயிலில் சீட் கிடைத்து எளிமையாக பயணம் மேற்கொள்ள முடியும். பயணிகள் ஆன்லைனில் ஐஆர்சிடிசி ஆப் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சில நேரங்களில் தட்கல் முறையிலும் டிக்கெட் புக் செய்து பயணம் செய்யலாம்.

இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்களில் பயணம் செய்வதற்காக 120 நாட்களுக்கு முன்னதாக பயணிகள் டிக்கெடை முன்பதிவு செய்ய முடியும். இதனால் 4 மாதங்களுக்கு முன்பே பொதுமக்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டு டிக்கெட்டைமுன்பதிவு செய்து கொள்கிறார்கள். தற்போது டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அளவை இந்தியன் ரயில்வே குறைத்துள்ளது.

அதன்படி டிக்கெட் புக்கிங் செய்வது 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் ரயில்களில் பயணம் மேற்கொள்பவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தங்களின் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த முன்பதிவில் வந்துள்ள மாற்றம் நடைமுறைக்கு வர இருப்பதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பயணிகளுக்கான 365 நாட்கள் டிக்கெட் முன்பதிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் பண்டிகை நாட்களில் நெரிசல் இல்லாத பயணத்தை உறுதி செய்யும் விதமாக கூடுதல் ரயில்களை இயக்குவதற்கும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து இருக்கின்றது.

இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான நாட்கள் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் 60 நாட்களுக்கு முன்பு தான் டிக்கெட்டைகளை முன் பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news