Connect with us

latest news

அப்படிபோடு… வெறும் ரூ.10000 பட்ஜெட்ல சூப்பர் வசதிகளுடன்… எந்த செல்போன் தெரியுமா..?

Published

on

10,000 ரூபாய் பட்ஜெட்டில் சாம்சங் நியூ மாடல் செல்போனை களம் இறக்கியுள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

பல வசதிகளுடன் கூடிய சாம்சங் கேலக்ஸி ஏ 14 5ஜி செல்போன் பாதிக்க பாதி விலையில் கிடைக்கின்றது. ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 1 டிபி மெமரி சப்போர்ட் போன்ற பல வசதிகளுடன் இந்த செல்போன் தற்போது அறிமுகமாக உள்ளது. 10 எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் ஆட்டோ போக்ஸ் போன்ற பட்ஜெட்டில் கிடைக்காத பிக்சர்களும் இந்த செல்போனில் கிடைக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி சிறப்பம்சங்கள்:

இந்த செல்போனில் 6.6 இன்ச் அதாவது 2400 × 1080 பிக்சல்கள் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட இன்பினிட்டி-வி எல்சிடி டிஸ்பிளே இருக்கின்றது.

இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. அதுமட்டுமில்லாமல் 16 மில்லியன் கலர் டெப்த் உள்ளது. இதுவொரு ரவுண்டெட் கார்னர் டிஸ்பிளே மாடலாக இருக்கின்றது.

இவ்வளவு குறைந்த விலையில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

ஆட்டோபோகஸ் மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் பேக் வசதிகளும் இதில் இருக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி செல் போனில் ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் உள்ளது.

13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கின்றது. இந்த செல்போனில் 2 மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

ஆகவே, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களை நாம் ஆர்டர் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ஒன்யுஐ 5.0 (OneUI 5.0) கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1330 5என்எம் சிப்செட் வருகிறது.

மீடியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாலி ஜி68 எம்பி2 கிராபிக்ஸ் கார்டு இதில் இருக்கின்றது அது மட்டும் இல்லாமல் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்கிறது.

5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டைப்-சி போர்ட் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் வருகிறது.

இந்த சாம்சங் போனின் கனெக்டிவிட்டியை பார்க்கும் போது, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) வருகிறது. 9.1 மிமீ தடிமன் மற்றும் 205 கிராம் எடை உள்ளது.

மேலும் இந்த செல்போன் டார்க் ரெட், லைட் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது நமக்கு விரும்பிய வண்ணத்தை தேர்வு செய்து இந்த செல்போனை வாங்கிக் கொள்ளலாம்.

முதன்முதலாக இந்த செல்போன் அறிமுகமானபோது, இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,499ஆக இருந்தது. அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,999ஆக இருந்தது.

ஆனால் தற்போது யாரும் எதிர்பார்க்காத விலையில் வெறும் ரூ.10,999 பட்ஜெட்டில் இந்த செல்போன் கிடைக்கின்றது. இந்த ஆப்பரை பயன்படுத்தி இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ள செல்போன்களை நீங்கள் உடனே ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *