Connect with us

Cricket

பழி தீர்த்தது பாகிஸ்தான்!…படு தோல்வி அடைந்த முன்னாள் உலக சாம்பியன்ஸ்…

Published

on

pakistan

பங்களாதேஷுடனான டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் அந்நாட்டு ரசிகர்களின் முழுக் கோபத்திற்கு ஆளாகியிருந்தது பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணி. சமீப காலமாகவே சொதப்பல் ஆட்டங்களை வெளிப்படுத்துவதாக குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் அந்த அணியின் மீது வைக்கப்பட்டு வந்த நிலையில், அவை எல்லாம் சரி தான் என் நிரூபிக்கும் விதத்தில் தான் விளையாடியது பாகிஸ்தான், முல்தானில் நடந்து முடிந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்.

சொந்த மண்ணில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்திருந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரரான பாபர் அசாம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட வில்லை. அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட கம்ரான் குலாம் அறிமுகப் போட்டியிலேயே சதம் விளாசினார். இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் வைத்து நடந்து வந்தது.

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அனி முன்னூற்றி அறுபத்தி ஆறு ரன்களையும், இங்கிலாந்து இருனூற்றி தொன்னூற்றி ஓரு ரன்களையும் எடுத்திருந்தன.

England

England

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸின் பேட்டிங்கை துவக்கிய பாகிஸ்தான் அணி இருனூற்றி இருபத்தி ஓரு ரன் களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணியின் பஷீர் நான்கு விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இந்த போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தனது இரண்டாவது இன்னிங்ஸின் பேட்டிங்கை துவங்கியது.

தொடர் தோல்விகளால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்த பாகிஸ்தான் அணி, இரண்டாவது டெஸ்ட் மேட்சின் இரண்டாவது இன்னிங்ஸ் பவுலிங்கில் மிகப்பெரிய எழுச்சியை கொடுத்து. மொத்தம் இரண்டே பவுலர்கள் மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசியிருந்தனர்.

வெறும் நூற்றி நாற்பது ரன்களை மட்டுமே எடுத்து பத்து விக்கெட்டுகளையும் இழந்து நூற்றி ஐம்பத்தி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் பரிதாபமாக தோற்றது ஐம்பது ஓவர் முன்னாள் உலக சாம்பியன் இங்கிலாந்து.

பாகிஸ்தான் அணியின் நோமன் அலி பதினாறு புள்ளி மூன்று ஓவர்களை வீசி நாற்பத்தி ஆறு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மீதம் இருந்த இரண்டு விக்கெட்டுகளையும் முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை எடுத்திருந்த சாஜித்கானே கைப்பற்றினார்.

அதோடு அவர் ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இரண்டாவதுன் டெஸ்ட் போட்டியில் முத்திரை பதித்ததன் மூலம் பாகிஸ்தான் அணி தன் மீது விழுந்த வந்த விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

google news