govt update news
ஆதார் அட்டையில இத செஞ்சுட்டீங்களா…? கடைசி நாள் இதுதான்… உடனே பண்ணிடுங்க..!
ஆதார் அட்டையை அப்டேட் செய்வதற்கு டிசம்பர் 14ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்று ஆதார் அட்டை. வங்கி தொடங்கி அரசு சார்ந்த அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டு முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோல் கேஒய்சி சரி பார்ப்பதற்கும் தேவைப்படும் முதன்மை ஆவணங்களில் ஆதார் கார்டு முதலிடத்தில் உள்ளது. ஆதார் கார்டில் உள்ள முகவரி, மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் சரியாக இருக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் நீங்கள் ஆன்லைனில் இதை உடனே மாற்றிக் கொள்ளலாம். மேலும் ஆதார் கார்டில் உள்ள அனைத்து தகவல்கள் மொபைல் நம்பர் அனைத்தும் மிகச் சரியாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஒருவேளை இதில் தவறாக இருந்தால் அரசு தொடங்கும் முக்கியமான திட்டங்களை மக்கள் பயன்படுத்த முடியாமல் போகும்.
எனவே ஆதார் அட்டையில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒருமுறை தங்களது அடையாள சான்று மற்றும் முகவரி சான்று ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும். ஆதார் தொடர்பான மோசடிகளை தடுப்பதற்காக பத்து வருடங்களாக ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்களது விவரங்களை புதுப்பிக்கும்படி யூஐடிஏஐ வலியுறுத்துகின்றது.
ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க வரும் டிசம்பர் 14ஆம் தேதி தான் கடைசி தேதி என கூறப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 14ஆம் தேதிக்குள் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களை உடனே அப்டேட் செய்து கொள்ளுங்கள். எந்தவித செலவும் இல்லாமல் நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம். டிசம்பர் 14க்கு பிறகு ஆதார் விவரங்களை அப்டேட் செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
நீங்கள் ஆதார் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in என்ற தளத்திற்கு சென்று அதில் மை ஆதார் என்பதை கிளிக் செய்யவும். உடனே கீழே தோன்றும் மெனுவில் உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன் பின் ஆதார் எண் மற்றும் கேப்சா சரிபார்ப்பு குறியீடு உள்ளிட்ட பிறகு சென்ட் ஓடிபி என்ற என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.
நீங்கள் ஓடிபி உதவியுடன் உள்ளே நுழைய முடியும். அதில் உங்கள் முகவரி, பெயர் உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக இருக்கின்றதா? என்பதை ஒரு முறை சரி பார்க்கவும். இந்த விவரங்களில் எந்த தவறும் இல்லை என்றால் என்னுடைய விவரங்கள் சரியாக உள்ளது என்பதை கிளிக் செய்யவும். ஒருவேளை தவறாக இருந்தால் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்யவும். இதற்காக ஏதாவது ஒரு அடையாள அட்டையை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற ஆதாரங்களை நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் அடையாள அட்டை அப்லோட் செய்யவும். மேலும் உங்கள் அடையாள அட்டை 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அதே சமயம் முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும், அதையே செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையும் அப்லோட் செய்ய வேண்டும். அடையாள அட்டையும் முகவரி ஆவணமும் ஜேபிஜி ஃபார்மேட்டில் இருத்தல் வேண்டும். நீங்கள் சமிட் செய்த பிறகு உங்களுக்கு கன்ஃபர்மேஷன் மெசேஜ் ஒன்று வரும். இதை வைத்து உங்கள் விவரங்கள் அப்டேட் ஆனதை நீங்கள் கண்காணிக்க முடியும்.