latest news
பச்சை கோடு பஞ்சாயத்து.. ஒன்பிளஸ்-இன் பலே விளக்கங்கள்..!
ஒன்பிளஸ் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களில் பச்சை கோடு பிரச்சினை மற்றும் மதர்போர்டு கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒன்பிளஸ் பயனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், ஒன்பிளஸ் பிரான்டின் தரம் மற்றும் நுகர்வோர் சேவை மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ச்சியாக பிரச்சினைகள் எழுந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் தன் தரப்பு விளக்கங்களை கொடுத்துள்ளது.
அதன்படி தொடர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒன்பிளஸ் நிறுவனம் பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளது. இவை ஒன்பிளஸ் பிரான்டின் தீர்வு காணும் விதம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் உள்ளது. இது குறித்த விவரங்களை ஒன்பிளஸ் நிறுவனம் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. பச்சை கோடு பிரச்சினை குறித்த கேள்விக்கும் ஒன்பிளஸ் பதில் அளித்துள்ளது.
அதில், பச்சை கோடு பிரச்சினை ஏற்பட்ட பயனற்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள ஒன்பிளஸ் சர்வீஸ் சென்டருக்கு விரைந்து சென்று, பிரச்சினையை சரி செய்து கொள்ளலாம். பிரச்சினை தொடர்பாக வாடிக்கையாளர்கள் ஆலோசனை செய்து அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றி முடிவு எடுக்கலாம். இதில் புதிய போனுக்கு அப்கிரேடு ஆவது மற்றும் டிஸ்ப்ளே மாற்றிக் கொள்வது போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
பச்சை கோடு பிரச்சினை ஏற்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், அது சந்தையில் பரவலாக ஏற்படும் ஒன்றுதான். எனினும், இதனை முடிந்தவரை சரி செய்துவிடுவோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். டிஸ்ப்ளே தொடர்பான பிரச்சினைகளை சரி செய்ய அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம் என்று ஒன்பிளஸ் தெரிவித்தது.