Connect with us

latest news

மாதம் மாதம் வருமானம் தரும் பென்ஷன் திட்டம்… ஓய்வு காலத்தில் பணத்தை பத்தி கவலை வேண்டாம்…!

Published

on

ஓய்வு காலத்தில் மாதம் மாதம் வருமானம் தரக்கூடிய ஒரு பென்ஷன் திட்டத்தை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

ஓய்வு பெற்றதற்கு பிறகு தங்களின் வழக்கமான வருமானத்தை யாரும் இழக்கக்கூடாது என்பதற்காகத்தான் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. பெரும்பாலான மக்கள் தங்கள் ஓய்வுக்கு பிறகு போதிய வருமானம் இல்லாமல் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். தங்களின் செலவுக்கு பிள்ளைகளின் கையை எதிர்பார்க்க வேண்டிய சூழல் உருவாகின்றது.

அப்படி எதுவும் நிகழக்கூடாது என்பதற்காக தேசிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது, இந்த திட்டத்தில் மொத்த பணம் மட்டுமல்லாமல் ஓய்வூதியத்தையும் முதலீட்டாளர்கள் பெற முடியும், என்.பி.எஸ் திட்டத்தில் ஒருவர் தன்னுடைய பெயரிலோ அல்லது தனது துணையின் பெயரிலோ கணக்கை துவங்க முடியும்.

மாதம் 5000 ரூபாய் டெபாசிட் செய்யும் போது சுமார் 45 ஆயிரம் வரை ஓய்வூதியத்தை நாம் பெற முடியும். இதனால் 60 வயதிற்கு பிறகு வழக்கமான வருமானத்தை இழக்காமல் நீங்கள் இருக்க முடியும். இதில் இரண்டு வகையான கணக்குகள் இருக்கின்றது. யார் வேண்டுமானாலும் டயர் 1 கணக்கை துவங்கலாம். டயர் 2 கணக்கை துவங்குவதற்கு டயர் 1 கணக்கு மிகவும் அவசியம்.  மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் மொத்த தொகையில் 60 சதவீதத்தை 60 வயது கடந்த பிறகு மொத்தமாக எடுத்துக் கொள்ள முடியும்.

முதலீடு செய்யப்பட்ட தொகையில் 40% தொடர்ந்து சந்தையில் முதலீடு செய்யப்படும். இதிலிருந்து சந்தை நிலவரத்தை பொறுத்து உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். 35 வயதில் துவங்கி தொடர்ந்து 60 வயது வரை இந்த திட்டத்தின் நீங்கள் முதலீடு செய்யலாம். 25 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் 15 சதவீதம் வீதம் 25 வருடங்களுக்கு டெபாசிட் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் உங்களுக்கு 15 ஆயிரம் விதம் 25 வருடங்கள் தொடர்ந்து டெபாசிட் செய்யும் போது மொத்த முதலீடு தொகை 45 லட்சமாக இருக்கும். இதற்கு 10 சதவீதம் வட்டியாக 1,55,68,356 ரூபாய் பெற முடியும். 60 வயது அடையும் போது மொத்தமாக முதலீடு தொகையை வட்டியுடன் நீங்கள் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். அதன்படி, 2,00,68,356 ரூபாயை உங்கள் கையில் வைத்திருக்க முடியும்.

இதில் 60 சதவீத தொகையை மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 40% தொகையை முதலீட்டாளர்கள் மாதம் பென்ஷனாக பெற முடியும். முதலீடு செய்த தொகையிலிருந்து பணம் எதுவும் எடுக்காமல் முழு தொகையிலிருந்தும் ஓய்வூதியம் பெரும் வசதியும் இருக்கின்றது. முதலீட்டாளர்கள் விரும்பினால் இந்த முறையில் ஓய்வூதியம் பெற முடியும், 60 வயதிற்கு மேல் வழக்கமான வருமானத்தை இழக்காமல் ஓய்வூதியத்தை பெறுவதற்கு தேசிய பென்ஷன் திட்டம் ஒரு நல்ல திட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

google news