Connect with us

govt update news

உங்களுக்கு சொந்த வீடு வேணுமா..? தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ்… வெளியான மகிழ்ச்சி செய்தி…!

Published

on

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் தற்போது வரை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இத்திட்டம் குறித்து தமிழக அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். கிராம பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படுகின்றது. வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக மானியம் வழங்கப்படுகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்திற்கு வட்டி விகிதம் என்பது மிகக் குறைவு. வருமானம் மற்றும் வீட்டின் அளவை பொறுத்து மானியத்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்திற்கு வட்டி விகிதம் குறைவு மற்றும் வீட்டின் அளவைப் பொறுத்து மானிய தொகை கிடைக்கும். 20 வருடங்களில் இந்த கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்கப்படுகின்றது.

நகர் மற்றும் கிராமப்புறம் என்று இரண்டு பிரிவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஊரகப்பகுதியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டில் மட்டும் 68,569 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதல் தவணை தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி 209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஒரு வீட்டிற்கு 1.20 லட்சம் என்ற அடிப்படையில் மொத்தம் 68,569 வீடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மாநில அரசு 40%, மத்திய அரசு 60 சதவீதமும் நிதி வழங்கி வருகின்றது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பலன்களை பெறுவதற்கு சில தகுதிகள் இருக்கின்றது.

அதன் இந்த படி திட்டத்தில் பலன்களை பெறுவதற்கு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும், மூன்று லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் இருக்க வேண்டும், எந்த ஒரு வீடு இல்லாதவராகவும் இருக்க வேண்டும், அது மட்டும் இல்லாமல் அரசு பணியிலும் இருக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

google news