Connect with us

Cricket

நீங்க வந்தா மட்டும் போதும்… பாகிஸ்தானில் நடக்கும் போட்டி… இந்தியா பங்கேற்பதற்கு ஐசிசி போட்ட மாஸ்டர் பிளான்..!

Published

on

பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி நடத்தும் போட்டியில் இந்தியா பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வரும் 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளானது பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்புவதில் தொடர்ந்து பிசிசிஐ தயக்கம் காட்டி வருகின்றது. இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்காது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு தீர்வை கொடுத்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் பாகிஸ்தான் இந்திய அணி தொடரில் பங்கேற்பதற்காக வழிவகைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றது, இதனால் பிசிசிஐக்கு பிசிபி கூறிய திட்டம் சற்று சமாதானத்தை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால் தொடரில் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் இந்திய அணி இந்தியாவிற்கு திரும்பலாம். பின்னர் அடுத்த போட்டி தொடங்கும் போது பாகிஸ்தான் வந்தால் போதும். இவ்வாறு ஒவ்வொரு போட்டியின் போதும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமாக சென்று சென்று வரும் திட்டத்தை பிசிபி பிசிசிஐக்கு கூறி இருக்கின்றது.

தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு இடையில் குறைந்தது ஒரு வாரம் இடைவெளி இருப்பதால் இது சாத்தியம் தான் என்று கூறப்பட்டுள்ளது. போட்டியை முடித்துக் கொண்டு இந்திய அணி சண்டிகர் விமான நிலையம் அல்லது டெல்லி விமான நிலையம் திரும்பலாம். இது இந்தியாவுக்கு ஏத்ததாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்த திட்டம் மட்டும் சாத்தியமானால் இந்திய அணி ஐசிசி நடத்தும் போட்டியில் இந்திய அணி பங்கேற்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை பிசிசிஐ ஏற்குமா? இந்திய அணி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

google news