Connect with us

cinema

லட்சத்தை தொட்ட ரஜினியின் சம்பளம்!…எந்த படத்திலிருந்து ஆரம்பம் தெரியுமா?…

Published

on

Rajini

நடிகர் ரஜினிகாந்தை தமிழ் நாட்டு ரசிகர்கள் மட்டுமல்ல இந்திய சினிமா ரசிகர்களும் கொண்டாடியே வருகின்றனர். உலகம் முழுவதும் வெளியான முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி, மணிவண்ணன், செளந்தர்யா, ரம்யாகிருஷ்ணன், லெட்சுமி ஆகியோருடன் ரஜினி கதாநாயகனாக நடித்த “படையப்பா” தான்.

ஜப்பானில் ரஜினிக்கென தனி ரசிகர் மன்றங்கள் துவக்கபடும் அளவிற்கு அவரது ஸ்டைலான நடிப்பினால் ஜப்பானியர்களை கவர்ந்திழுத்தது “முத்து” படம். தற்போது ரஜினி நடிப்பில் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “வேட்டையன்” படம் தென் கொரிய நாட்டில் திரையிடப்பட்டது.

ஆரம்பத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தே வந்தார் ரஜினி. அதன் பின்னர் கமல் அட்வைஸைக் கேட்டு கதாநாயகனாக நடிக்கத் துவங்கினார்.

Priya

Priya

இவரது ஸ்டைலான  மற்றும் சுறுசுறுப்பான நடிப்பினால் ரஜினி மெல்ல மெல்ல முன்னனி நாயகராக தமிழ் சினிமாவில் தலை தூக்கத் துவங்கினார்.

“புவனா ஒரு கேள்விக்குறி”, முள்ளும் மலரும்”, “ஆறிலிருந்து அறுபது வரை” போன்ற படங்களில் வித்தியாசமான ரஜினியை பார்த்திருந்தனர் அவரது ரசிகர்கள்.  அதுவரை மாஸ் ஹீரோ படங்களில் மட்டுமே அவர் நடித்திருந்தார். அவர் டயலாக் பேசும் விதம், அவரது ஸ்டைலான உடல் அசைவுகள் அழுத்தமான வசன உச்சரிப்பு போன்றவை அவரை கூர்ந்து கவனிக்க வைத்தது.

கோடிகளில் இப்போது சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ரஜினி லட்ச ரூபாயை நெருங்கவே கடுமையாக போராடி இருக்கிறார் ஒரு காலத்தில். சுஜாதா எழுதிய கதையில், பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் “ப்ரியா”. ரஜினி ஹீரோவாக நடிக்க ஸ்ரீதேவி, அம்ரீஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த படம் அது.

இந்த படத்தில் தான் ரஜினிக்கு முதன் முதலில் ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை இந்த படத்தில் முதன் முதலாக பெற்றிருந்த ரஜினி அதன் பிறகே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார்.

google news