latest news
மொபைல்னா இனி மினிமா தானா?…நோட் பண்ண வேண்டிய நோக்கியாவின் புதிய மாடல்!…
செல் போன்கள் எனச் சொல்லுவதற்கு பதிலாக இப்போதான் நோக்கியா போன் வாங்கினேன் என சொல்லப்பட்ட அளவில் செல்போன் உலக மார்க்கெட்டை ஒரு காலத்தில் ஆட்டிப் படைத்து வைத்திருந்த ‘நோக்கியா’ நிறுவனம். ஆண்ட்ராய்ட் மொபைல்களின் அறிமுகத்திற்கு பின்னர் நோக்கிய நிறுவனத்திற்கு என சர்வதேச் சந்தையில் இருந்த பெயர் மெதுமெதுவாக குறையத் துவங்கியது.
ஸ்மார்ட் போன்களின் மாடல்களை அடுக்கி விட்டன புதிதாக வந்த கம்பெனிகள். அதுவரை இந்திய மொபைல் போன் மார்க்கெட்டில் நெருங்கக் கூட முடியாத ராஜாவாக இருந்து வந்தது ‘நோக்கியா’ நிறுவனம்.
இதன் ஸ்மார்ட் போன்களுக்கு முன் காலத்தின் இவர்களது தயாரிப்புகளுக்கான ஆதரவு இல்லாமல் இருந்து வரும் இந்த நேரத்தில் கூட ‘நோக்கியா’ தனது புதிய வகை ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வந்து கொண்டே தான் இருக்கிறது.
6.5 இஞ்ச் முழு ஹெஸ்டி டிஸ்ப்ளே கொண்ட நோக்கியா மினிமா -5ஜி ஸ்மார்ட் போன்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. 5ஜி கனக்டிவிட்டியுடன் ஸ்னாப் ட்ராகன் 7 சீரியஸ் கொண்டு உள்ளங்கையில் உலா வரப்போகிறது நோக்கிய மினிமா 5ஜி போன்கள். 108 மெகா பிக்ஸசல் ஹை ரிஸலுசன் மெயின் கேமரா, 32 மெகா -பிக்ஸல் ப்ரன்ட் பேஸிங் கேமராவோடு வர இருக்கிறது நோக்கியாவின் இந்த புதிய தயாரிப்பான மினிமா – 5ஜி.
6000 எம்.ஏ.ஹைச் கேபாசிட்டி கொண்ட பேட்டரிகள், நாற்பது நிமிடத்தில் சார்ஜிங் முழுமையடையும் என சொல்லப்படுகிறது. விலை குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ரேம் ஸ்டோரேஜ் கேப்பாஸிட்டி, விலை என இரண்டு வேரியன்டுகளில் மொபைல் மார்க்கெட்டில் இன்ட்ரோ செய்யப்பட இருக்கிறது. ஒரு காலத்தில் நோக்கியா போன் களுக்கு இருந்த வரவேற்பு இந்த புதிய மாடலின் அறிமுகத்திற்கு பிறகு கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.