Connect with us

latest news

நீரின்றி அமையாது உலகு…தெரிந்து கொள்வோம் உலக தண்ணீர் தினம் பற்றி!…

Published

on

Water

உலகில் உணவின்றி கூட ஒரு சில நாட்கள் தாக்கு பிடித்து விடலாம், ஆனால் தண்ணீர் குடிக்காமல் வாழ்வது மிகவும் கடினம். நீர் அருந்துவதன் அளவு தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்ப மாறி, மாறி அமைந்தாலும், தண்ணீர் குடிக்காமல் இருக்கவே முடியாது. உலகில் பிரதானம் கிடைக்கக் கூடிய விஷயங்களில் தண்ணீரும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த நீரின் பெருமையை தெரிவிக்கும் விதமாக ‘உலக நீர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. 1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ-டி-ஜெனீரோ நகரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபை பேரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்ட 21 ஆம் நூற்றாண்டின் செயல்திட்டத்தின் படி 1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22 ஆம் தினம் ‘உலக நீர் தினம்’ ஆக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதன்படி ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஒரு கருப்பொருளை அடிப்படையாக கொண்டு ‘உலக நீர் தினம்’ கொண்டாடப்பட்டு வரப்படுகிறது.

Water Flow

Water Flow

இந்த கொண்டாட்ட தினம் பற்றிய தகவலின்  நடுவே தண்ணீர் சேமிப்பு குறித்து சில ஆராய்ச்சிகள் சொல்லியிருப்பது என்னவென்றால் 1998 ஆம் ஆண்டின் மொத்த மக்கள் தொகையில் 76 % சதவீதம் மக்களுக்குத் தேவையான குறிப்பிடத்தக்க தண்ணீர் இருப்பு ஆண்டிற்கு 5 ஆயிரம் மீ அளவு கிடைக்கும் நிலை இருந்ததாக சொல்லப்பட்டிருந்தது. அது தற்போதைய கணக்கீட்டின் படி மாறியிருக்கும்.

இது போல ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் (1998ம் ஆண்டு)  நடத்தபட்ட கணக்கீட்டின் படி, 35 % சதவீத உலக மக்கள் குறைவான தண்ணீர் விநியோகம் அல்லது முற்றிலுமான தண்ணீர் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டிருந்தது.

இதே நிலை 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து பூமியிலுள்ள மக்கள் தொகையில் பெரும்பாலான மக்கள் குறைவான தண்ணீர் விநியோகத்தாலும், பஞ்சத்தாலும் நிலைகுலைய வேண்டிய நிலைமை வரலாம் என்று கணிப்புகள் சொல்லியிருந்தது.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகின்ற இந்த நேரத்தில், கணிப்புகள் சொல்லியிருந்த படி எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க, நீர் வளத்தை காப்பது குறித்த விழிப்புணர்வு செய்திகளும், தகவல்களும் தெரியப்படுத்தப்பட்டும் வருகிறது.

வருங்கால தலைமுறைக்கு தண்ணீரின் அத்தியாவசியம், மற்றும் அதன் சேமிப்பு குறித்தும் உணர்த்த அறிஞர்களும் மக்களுக்கு அறிவுறித்தி வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரினைப் பற்றி உலகப் பொது மறையாம் திருக்குறளில் கூட திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

“நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு” – குறள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *