Connect with us

automobile

இந்தியாவில் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு காப்புரிமை பெற்ற ஹோண்டா – வெளியீடு எப்போ தெரியுமா?

Published

on

Honda-Dax-e-and-Zoomer-e

ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வாகனங்களுக்கான காப்புரிமை பெறும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் தான் CBR250RR மற்றும் CL300 மாடல்களை ஹோண்டா நிறுவனம் காப்புரிமை செய்தது. தற்போது இந்த வரிசையில், இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஹோண்டா நிறுவனம் காப்புரிமை பெற்று இருக்கிறது.

இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் Dax e: மற்றும் Zoomer e: என்று அழைக்கப்படுகின்றன. இவை அதிநவீன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் ஆகும். ஏற்கனவே இதன் பெட்ரோல் வேரியண்ட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இரண்டு ஸ்கூட்டர்களும் அளவில் சிறியதாகவும், போஷ் நிறுவனத்தின் ஹப் மோட்டார் கொண்டிருக்கின்றன.

Honda-Dax-e-and-Zoomer-e

Honda-Dax-e-and-Zoomer-e

இவற்றை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் கிடைக்கும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளன. ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஏத்தர் 450, ஒலா S1 சீரிஸ் அல்லது டி.வி.எஸ். ஐகியூப் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்க முடியாது.

எனினும், இவை பொருட்களை வினியோகம் செய்யும் பணிகளுக்காக B2B வகையில், நிறுவனங்களிடையே பயன்படுத்த ஏற்றதாக இருக்கும். அம்சங்களை பொருத்தவரை புதிய ஹோண்டா Dax e: மற்றும் Zoomer e: மாடல்களில் எல்.இ.டி. லைட்டிங் கொண்ட ஹெட்லேம்ப், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்டேஷன், இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் இந்திய சந்தையில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், 2024 ஆண்டு ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டர் பற்றிய விவரங்கள் ரகசியாக உள்ளன.

Honda-Dax-e-and-Zoomer-e

Honda-Dax-e-and-Zoomer-e

எனினும், இந்த மாடல் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்களின் மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஹோண்டா போன்றே சுசுகி நிறுவனமும இந்திய சந்தையில் தனது பர்க்மேன் மேக்சி ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. ஏற்கனவே இந்த வேரியண்ட் சோதனை செய்யப்படும் புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *