Connect with us

Cricket

கடைசியா ஒருதடவ.. கே.எல். ராகுல் செயலால் குழம்பிய ரசிகர்கள்.. ஒருவேளை இருக்குமோ?

Published

on

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு கே.எல். ராகுல் பெங்களூரு மைதானத்தில் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. இது தொடர்பாக பகிரப்படும் வீடியோக்களில் கே.எல். ராகுல் பிட்ச்-ஐ தொட்டு வணங்கி செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கே.எல். ராகுல் செய்த செயல்கள் அவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியதை போன்று இருப்பதாக ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர். 2013 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் கே.எல். ராகுல் ஐ.பி.எல். தொடரில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஹோம் கிரவுண்ட் ஆகும். மேலும், உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் கர்நாடகா மாநிலத்திற்காக விளையாடி வருகிறார்.

பெங்களூரு பிட்ச்-ஐ கே.எல். ராகுல் வணங்கிய வீடியோவுக்கு சிலர், “இது தான் அவரின் கடைசி டெஸ்ட் போட்டியா?” என்றும் மற்றொருவர், “அது தனது கடைசி டெஸ்ட் போட்டி என்று அவருக்கு தெரியும்” என்றும் சிலர், “அவர் bye சொல்வதாக நான் நினைக்கிறேன்,” என்றும் கமென்ட் செய்துள்ளனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் முதல் இன்னிங்ஸில் 0, இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்களை எடுத்து அவுட் ஆனார். போட்டியை பொருத்தவரை நியூசிலாந்து அணியின் வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஜோடி ஆட்டமிழக்காமல் 75 ரன்களை அடித்தது. இதன் மூலம் இந்தியாவில் நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.

google news