Connect with us

latest news

ரெடியான அடுத்த விவோ 5ஜி… அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் எந்த மாடல் தெரியுமா..?

Published

on

விவோ நிறுவனம் அடுத்ததாக அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட் போன் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. விவோ எஸ் 20 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் தற்போது TENAA தளத்தில் V2429A என்ற மாடல் நம்பர் உடன் இருக்கின்றது. வரும் நாட்களில் சீனாவில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் அதனை தொடர்ந்து இந்தியாவிலும் சில வாரங்களில் இந்த விவோ போன் அறிமுகமாகும் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் ஆன்லைனில் இந்த செல்போனில் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது.

விவோ எஸ் 20 சிறப்பம்சங்கள் :

இந்த செல்போன் 6.67-இன்ச் 1.5கே அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர் 10 பிளஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் , 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ போன்ற வசதிகளும் உள்ளன.

கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 720 ஜிபுயு கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது மேலும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்ற 50எம்பி கேமரா கொண்டுள்ளது.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் , யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தி இருக்கின்றது

இந்த செல்போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.4, பெய்டோ, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் இருக்கின்றது.

அடுத்ததாக இந்த செல்போனில் 6500mAh பேட்டரி இருக்கின்றது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலைப்பட தேவையில்லை. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்க கூடியது.

அதேபோல் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். இந்த செல்போன் விரைவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது இத்தனை திரும்ப அம்சங்கள் கொண்ட செல்போனை விவோ பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

google news