Finance
தீபாவளி ட்ரீட் கொடுத்த நிறுவனம்…ஷேர் மார்க்கெட்டில் ஸ்வீட் நியூஸ்?…
ஷேர் மார்க்கெட்டில் மல்டி பேக்கர் பென்னி ஸ்டாக் நிறுவனம் கொடுத்துள்ள அறிவிப்பு அதன் இன்வெஸ்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிக போன்ஸ் புள்ளிகளோடு பங்கு பிரிப்பு பற்றிய அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது தான் அளவற்ற மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஸ்மால்கேப் வகையைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் அதிகமான முதலீட்டாளர்களை தன் வசம் வைத்து வருகின்றன. தங்களது நிறுவனத்தின் மீதான முதலீட்டினை அதிகரிக்க அதன் பயனாளிகளுக்கு சலுகைகளை அள்ளி வீசியும் வருகின்றன.
அத்தகைய ஸ்மால்கேப் நிறுவன்மான செல்வின் டிரேடர்ஸ் நிறுவனம் அதன் பங்குதாரர்களை மகிழ்விக்கும் விதமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதன் பங்கு தாரர்களுக்கு 1 : 8 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளுடன் 1 : 5 என்ற விகிதத்தில் பங்குப் பிரிப்புக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த போனஸ் பங்குகள் மற்றும் பங்கு பிரிப்பிற்கான பதிவு தேதியை அறிவித்துள்ளது செல்வின் டிரேடர்ஸ். கடந்த ஆண்டு 118சதவீத லாபத்தை வழங்கியதன் மீலம் மல்டி பேக்கர் பங்காக மாறியிருந்தது அந்நிறுவனம். அதன் பங்கு ரூ.50க்கு கீழ் உள்ள பென்னியாகும்.
நிறுவனத்தின் பரிவர்த்தனை தாக்கல் படி, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு 1:5 என்ற விகிதத்தில் பங்குகளை பிரிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ரூ. 10 முக மதிப்புள்ள ஒரு பங்கு ரூ. 2 முகமதிப்பு கொண்ட 5 ஈக்விட்டி பங்குகளாகப் பிரிக்க நிறுவனத்தின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் இயக்குநர்கள் குழுவானது இந்த போனஸ் பங்குகளை வெளியிடுவதற்கான பதிவு தேதியை நவம்பர் 01, 2024 என நிர்ணயித்துள்ளது என்று நிறுவனம் தனது பரிமாற்றத் தாக்கல் செய்ததில் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் பரிவர்த்தனை தாக்கல் படி நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 1 : 5 என்ற விகிதத்தில் பங்குகளை பிரிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.10முக மதிப்புள் ஒரு பங்கு ரூ.2 முகமதிப்பு கொண்ட 5 ஈக்விட்டி பங்குகளை பிரிக்க அந்நிறுவனத்தின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த போன்ஸ் பங்குகளை வெளியிடுவதற்கான பதிவு தேதி வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்வின் டிரேடர்ஸ் தமாஸ்க் ஜூவல்லர்ஸ் பிரைவேட் நிறுவனத்தில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி 51% பங்குகளை வாங்க உள்ளது.
இந்த முதலீடு செல்வின் டிரேடர்ஸ் நிறுவனத்தின் எதிர்கால வணிகத் திட்டங்கள் மற்றும் நகைத் துறையில் அதன் இருப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.