latest news
மரங்களின் அவசியமும்…உலக வன தினமும்!…
இயற்கை மனிதனுக்கு வழங்கியுள்ள வரப்பிரசாதம் தான் மரங்கள். மனிதன் வாழ ஆச்ஸிஜன் மிக முக்கியமானதான ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்றே தான். இந்த ஆக்ஸிஜன் மனிதனுக்கு மரங்களின் மூலமே அதிகமாக கிடைக்கிறது. ஃபோட்டோஸின்தஸிஸ் மூலம் தான் கார்பன்-டை-ஆக்சைடு, ஆக்ஸிஜன் சுழற்சி நடைபெறுகிறது.
பகல் நேரத்தில் அதிகமான ஆக்ஸிஜனையும், இரவு நேரத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடையும் அனேகமான மரங்கள் வெளிப்படுத்துவதால் தான் மாலை நேரத்திற்கு பிறகு மரங்களின் அடியில் ஓய்வெடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பதனை அறிவியல் உணர்த்துகிறது.
இதன் பொருளை வேறு விதங்களாக, முன்னோர்கள் மூலமாக சொல்லப்பட்டதை பலரும் அறிந்திருக்க நேரிட்டிருக்கும். மரங்கள் மற்றும் அதன் பயன்களை பற்றி தற்போது அதிகமான விழிப்புணர்வகள் நடத்தப்பட்டு வருகிறது. இயற்கையாக கிடைக்கும் இந்த மனிதனின் உயிர் மூச்சுக் காற்றான ஆக்ஸிஜனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது கட்டாயமே. அதனை எளிதாக கொண்டுச் செல்வது மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதன் மூலமே பிரதானப்படும்.
இதனால் தான் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் மரக்கன்றுகள் நடுவது குறித்த நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்படுகிறது. இயற்கை ஆர்வலர்கள் மரம் நடுதல் குறித்த விரிவான விளக்கங்களை அவ்வப்போது வழங்கி வருகின்றனர். புவி வெப்பமடைதல், கடல் நீர் மட்டம் உயருதல் என எல்லாவற்றினையும் சமநிலைக்கு கொண்டு வருவது மரங்கள் வளர்ப்பதன் மூலமே அதிகப்படுத்த முடியும்.
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் கூட இதனை பற்றி அன்றே வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்” – குறள்.
தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், காட்டு அரண் என இயற்கை அரணகாளக இருக்கிறது என்பது தான் இக்குறளின் பொருள்.
மலைகளும், நீர் ஆதாரங்களும் நாளும் சிறந்து விளங்க வனங்களும், காடுகளும் இன்றியமையாதவையாக இருக்கின்றன.
மரங்களை அதிகப்படியாக கொண்டுள்ள காடுகள் இன்று அதிகமாக அழிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரியப்படுத்தி வரும் நிலையில் காடுகளின் முக்கியத்துவத்தினை தெரிவிதக்கும் விதமாகத் தான் ‘உலக வன நாள்’ ஆண்டு தோறும் மார்ச் மாதம் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது.
1971ம் ஆண்டு ஃபுட் அண்ட் அக்ரிகல்சுரல் என்னும் அமைப்பு மார்ச் மாதம் 21ம் தேதி உலக வன நாளை கொண்டாட வேண்டும் என்ற முடிவினை எடுத்து, அந்த முடிவின் படி தான் இந்த கொண்டாட்டம் துவங்கி இப்போது வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.