Connect with us

latest news

ஓய்வு காலத்தில் கை நிறைய வருமானம்… சீனியர் சிட்டிசன்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு…!

Published

on

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக லாபம் கிடைக்கின்றது. இது தொடர்பான தகவலை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

மூத்த குடிமக்கள் சிறந்த வருமானத்திற்காக முதலீடு செய்ய நினைத்தால் நிலையான வைப்பு நிதி திட்டம் உங்களுக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும். குறிப்பாக பல தனியார் வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு மூன்று ஆண்டுகால எஸ்டிக்கு 8 சதவீதத்திற்கும் மேல் வட்டி வருமானம் தருகிறார்கள். நீண்ட கால எஃப்டிகளில் முதலீடு செய்வதால் மூத்த குடிமக்களுக்கு நிலையான வருமானத்தை கொடுக்க முடியும்.

இதை தாமதப்படுத்துவதால் வட்டி விகிதங்களை குறைக்கும் வாய்ப்பையும் இழக்க நேரிடும். மூத்த குடிமக்கள் நீண்ட கால எஃப் டி திட்டத்தில் சேர சரியான நேரமாக இது இருக்கும். எனவே அதிக வட்டி வீதங்களின் பலன்களை பெற முடியும். நீங்கள் தாமதித்தால் ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் இந்த வாய்ப்பு இல்லாமல் போகலாம்.

சில தனியார் வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட எப்டிக்களில் சிறந்த வட்டி விகிதங்களை கொடுக்கின்றார்கள். எந்தெந்த வங்கியில் என்னென்ன வட்டி விகிதங்களை கொடுக்கின்றார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

டிசிபி வங்கி : இந்த வங்கி மூன்று வருட எப்டிக்கு 8.5 சதவீதம் வட்டியை கொடுக்கின்றது. அதன்படி நீங்கள் ஒரு லட்சம் எப்டி செய்தால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தொகை 1.27  லட்சமாக உங்களுக்கு கிடைக்கும்.

ஆர்பிஎல் வங்கி மற்றும் எஸ் வங்கி:  இந்த இரண்டு வங்கிகளும் மூன்று வருட எப்டிகளுக்கு 8 சதவீத வட்டியை கொடுக்கின்றன. இதில் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் எப்டி செய்தால் 3 ஆண்டுகளில் 1.27 லட்சம் கிடைக்கும்.

sbm வங்கி: இந்த வங்கியில் நீங்கள் மூன்று வருட எப்டிக்கு 7.80 சதவீத வட்டி பெறுகிறீர்கள். 1 லட்ச ரூபாய் எப்டி செய்தால் மூன்று ஆண்டுகளில் 1.26 லட்சம் கிடைக்கும்.

ஆக்சிஸ் வங்கி: இந்த வங்கி 7.60% எப்டி கொடுக்கின்றது. இதன் காரணமாக நீங்கள் ஒரு லட்சம் எப்டி செய்தால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் 1.25 லட்சம் கிடைக்கும்.

பெடரல் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிசி வங்கி: இந்த 3 வங்கிகளில் வட்டி விகிதம் 7.50 சதவீதமாக உள்ளது. ரூ.1 லட்சம் எப்டி செய்தால் மூன்று ஆண்டுகளில் ரூ.1.25 லட்சமாக மாறும்.

 

google news