Finance
சொந்த வீடு தாங்க சூப்பர்!…அதிகரித்து வரும் எண்ணிக்கை…
அனராக் எஃப்ஐசிசிஐ அன்மையில் இந்தியாவில் சொந்த வீடு வாங்க விரும்புபவர்கள் குறித்த ஆய்வினை நடத்தியிருக்கிறது. கொரோனா தொற்று காலத்திற்கு முன்னர் 90லட்சம் ரூபாய் முதல் 1.5கோடி ரூபாய் வரை விலை கொண்ட வீடுகளை வாங்க விரும்பியவர்களில் சதவீதம் 18ஆக இருந்து வந்திருக்கிறது. இது இப்போது 10 சதவீதம் உயர்ந்து 28சதவீதமாக மாறி இருப்பதாக ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது.
கோவிட் 19 தொற்றுக்கு பிறகு மலிவு விலை வீடுகளுக்கான தேவை குறைந்து வருவதாகவும். ஆரம்பத்தில் நிதி ரீதியாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் இப்போது மலிவு விலை வீடுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துந்துள்ளது எனவும் சொல்லபடுகிறது.
இந்த கணக்கெடுப்பில் குறைந்தபட்சம் 53சதவீத வீடு வாங்குபவர்கள் முக்கியமான நகரங்களில் கிடைக்ககூடிய மலிவு விலை வீடுகள் மீது அதிருப்தி கொண்டவர்களாக மாறிவிட்டதாக தெரியப்படுத்தப் படுகிறது.
2024ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து முதல் பாதி வரி குடியேறுவதற்கு தயாராக இருக்கக்கூடிய வீடுகளின் தேவை விகிதம் 20-25 ஆக இருக்கிறது என்றும் அனுராக் நிறுவனம் நடத்தி வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
3பிஹைச்கே வீடுகளுக்கான தேவை குறிப்பாக சென்னை, ஹைதராபாத், டெல்லி, என்சிஆர் மற்றும் பெங்களூருவில் அதிகமாக இருப்பதாக கணக்கடுப்பின் போது 50 சத வீதமானவர்கள் கூறியதாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு நேர் மாறாக கொல்கத்தா, மும்பை மற்றும் புனேவில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் 2பிஹைச்கே வீடுகளே அவர்களது விருப்பம் என சொல்லியிருந்திருக்கிறார்கள்.
தங்களது ஆய்வில் கலந்து கொண்ட அதிருப்தியடைந்த மலிவு விலையிலான வீடு தேடுபவர்களில், 92% பேர் வீட்டின் இருப்பிடத்தை மிகப்பெரிய குறைபாடு என்று அடையாளம் கண்டுள்ளனர்.
அதே நேரத்தில் 84% பேர் குறைந்த கட்டுமான தரம் மற்றும் வடிவமைப்பு கூறுகளை முக்கிய தடையாகக் குறிப்பிடுகின்றனர். சுமார் 68% பேர் மலிவு விலை வீடுகளுக்கான அளவு மிகச் சிறிய அளவில் உள்ளதாக கருதுகின்றனர்”, என்று அனராக் குழுமத்தின் தலைவர் அனுஜ் பூரி சொல்லியிருக்கிறார்.