Connect with us

latest news

கூகுள் பே, போன் பே ஆப்-க்கு எச்சரிக்கை… யுபிஐ-க்கு பதிலா இத பயன்படுத்திக்கோங்க..!

Published

on

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கான காரணங்களை குறித்து இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

இன்றைய சூழலில் அனைவருமே டிஜிட்டல் முறையை தான் பயன்படுத்துகிறார்கள். ஒரு கடைக்கு சென்று மளிகை பொருட்கள், பால், காய்கறிகள் போன்ற தினசரி பொருட்களை வாங்குவதற்கு யுபியை பேமெண்ட்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் நாம் யுபிஐ பேமென்ட் இருக்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

அவர்கள் ஏன் அப்படி கூறுகிறார்கள் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் யுபிஐ பேமெண்ட் மற்றும் யுபிஐ வாலெட் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். யுபிஐ மற்றும் யுபிஐ வாலெட் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால் யுபிஐ என்பது இரண்டு வங்கி கணக்குகளுக்கு இடையே பணப்பரிமாற்றத்தை அனுமதிக்கும் ஒரு கட்டண முறை.

இந்த பரிமாற்றமானது ஸ்மார்ட்போனில் உள்ள யுபிஐ ஆப்பின் மூலம் செயல்படுகின்றது. கூகுள் பே, போன் பே போன்றவற்றில் அடங்கும். மறுபுறம் யுபிஐ வாலட் என்பது ஒரு வகையான ப்ரீபெய்ட் வாலெட், யுபிஐ ஆப் உடன் இணைக்கப்பட்ட ஒரு அமைப்பு. இந்த வாலெட்டில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை தினசரி மற்றும் சிறிய பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம். நீங்கள் உங்கள் வங்கி கணக்கை இதற்காக அணுக வேண்டிய அவசியம் இருக்காது.

முதலில் யுபிஐ வாலட்டை பயன்படுத்துவதற்கு நிபுணர்கள் கூறும் காரணங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சிறிய தொகையை பரிவர்த்தனை செய்வதற்கு யுபியை வாலெட் மிகவும் பாதுகாப்பானது. இதற்கு முக்கிய காரணம் இதன் கீழ் உங்கள் வங்கி கணக்கை அணுக வேண்டிய அவசியம் கிடையாது. உங்கள் வாலெட்டில் உள்ள தொகையை மட்டும் நீங்கள் செலுத்தினால் போதும்.

எடுத்துக்காட்டாக நீங்கள் 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிலை உள்ளபோது தவறுதலாக ஒரு பூஜ்ஜியத்தை சேர்த்து போட்டு விட்டால் கூட அது 5000 ரூபாயாக மாறிவிடும். இது யுபிஐ கட்டணத்தில் சாத்தியமாகும். ஆனால் யுபிஐ வாலட்டில் இதற்கான வாய்ப்பு குறைவு. யுபிஐ வாலெட்டின் வரம்பே வெறும் 300 ரூபாய் தான். மேலும் யுபிஐ வாலட்டை பயன்படுத்தும் போது கேஷ் பேக் சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் ரிவார்ட் பாயிண்ட்கள் கிடைக்கும்.

யுபிஐ கட்டணத்தில் இது கிடைப்பதில்லை. பல வாலெட் வல்லுனர்கள் இ காமெர்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்கள். இதன் மூலமாக வாலெட் வழியாக பணம் செலுத்தும் போது பயனாளர்களுக்கு சில வெகுமதியும் வழங்கப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது என்பது மிகவும் எளிதானது.

சிறிய கட்டணங்களை செலுத்துவது மிகவும் எளிமையாக இருக்கும். இதற்கு நீங்கள் யுபிஐ பின்னை உள்ளிட வேண்டியது இல்லை. பரிவர்த்தனையை விரைந்து முடிக்க முடியும். ஒவ்வொரு நாளும் சிறிய பரிவர்த்தனைகளுக்கு இதை பயன்படுத்தினால் உங்கள் நேரமும் மிச்சமாகும். இதற்காகத்தான் நிபுணர்களும் வல்லுனர்களும் யுபிஐ வாலட்டை பயன்படுத்த அறிவுறுத்துகிறார்கள்.

google news