Finance
சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…
சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.சென்ற நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், 280.60 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம், தற்போது 1.60 சதவீதம் அதிகரித்து, 285.20 கோடி ரூபாயாகி உள்ளது.
இன்றைய வர்த்தக அமர்வில் சிட்டி யூனியன் வங்கி பங்குதாரர்களுக்கு பணமழை பொழிந்துள்ளது என்றே தான் சொல்ல வேண்டும். வங்கியின் பங்குகள் 14சதவீதத்திற்கும் அதிகமான லாபத்துடன் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு 32சதவீதத லாபத்தை அளித்திருந்தது சிட்டி யூனியன் வங்கி.
நடப்பு நிதியாண்டின் செப்டம்பரில் முடிவடைந்த காலாண்டில் வங்கி நல்ல நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.
இன்றைய வர்த்தக அமர்வில், சிட்டி யூனியன் வங்கி லிமிடெட் பங்கு விலை 14 சதவீதம் அதிகரித்து ரூ. 171.84/- ஆக வர்த்தகமாகிறது.
52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ. 176.82/- ஆகவும், 52 வாரங்களில் குறைந்தபட்ச அளவாக ரூ. 125.40/-ஆகவும் உள்ளது. சிட்டி யூனியன் வங்கியின் பங்கு விலை கடந்த ஒரு வாரத்தில் சுமார் 11சதவீதமும், கடந்த மாதத்தில் சுமார் 1சதவீதமும், கடந்த ஆறு மாதங்களில் சுமார் 10சதவீதமும், கடந்த ஆண்டில் சுமார் 32சதவீதமும், கடந்த 5 ஆண்டுகளில் 18சதவீதமும் உயர்ந்துள்ளது. தற்போது இந்த வங்கியின் சந்தை மதிப்பு ரூ.12,720/- கோடியாக உள்ளது.
அவ்வங்கியின் மொத்த வாரக்கடன் அளவு 3.88சதவீதத்தில் இருந்து 3.54 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் அளவு 1.87சதவீதத்தில் இருந்து 1.62சதவீதமாகவும் குறைந்துள்ளது. கடன் வசூலிப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறப்பாக கடன் அபாயங்களை கையாண்டது ஆகியவற்றால், இந்த காலாண்டு முடிவுகள் சிறப்பாக அமைந்ததாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது முன்னதாக.