Connect with us

latest news

60MP சென்சார்.. அழகிய செல்ஃபி எடுக்கலாம்.. சூப்பர் போன் அறிமுகம்..!

Published

on

ஹூவாய் நிறுவனம் தனது புதிய நோவா 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுதம் செய்தது. இதில் நோவா 13 மற்றும் நோவா 13 ப்ரோ மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இரு மாடல்களிலும் கிரின் 8000 சிப்செட், 12GB வரையிலான ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

நோவா 13 மாடலில் 6.7 இன்ச் Full HD+ 2412×1084 பிக்சல் OLED ஸ்கிரீன், அதிகபட்சம் 120Hz ரிப்ரெஷ் ரேட், நோவா 13 ப்ரோ மாடலில் 6.76 இன்ச் OLED குவாட்-கர்வ்டு டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹார்மனி ஓ.எஸ். 4.2 வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க நோவா 13 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 60MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. நோவா 13 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP டெலிபோட்டோ கேமரா, 8MP மேக்ரோ லென்ஸ், 60MP செல்பி கேமரா, 8MP ஜூம் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹூவாய் நோவா 13 மற்றும் நோவா 13 ப்ரோ என இரு மாடல்களும் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றன. இத்துடன் 100 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. கனெக்டிவிட்டிக்கு வைபை, ஓ.டி.ஜி., என்.எஃப்.சி., ப்ளூடூத் 5.2, பெய்டௌ செயற்கைக்கோள் தொடர்பு வசதி மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது.

சீன சந்தையில் ஹூவாய் நோவா 13 விலை இந்திய மதிப்பில் ரூ. 31,800 என துவங்குகிறது. நோவா 13 ப்ரோ மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 43,600 என துவங்குகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் ஃபெதர் சாண்ட் பர்ப்பில், ஃபெதர் சாண்ட் வைட், லண்டன் கிரீன் மற்றும் ஸ்டார் பிளாக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

google news