Featured
தங்கம் வாங்கனும்னா இத நோட் பண்ணவேணுமோ?…
தங்கம் என்பது இந்தியர்களின் வாழ்வில் ஒரு அங்கம் என்று சொன்னால் அது மறுக்க முடியாத ஒன்றாகக் கூட இருக்கலாம். சடங்கு, சம்பர்தாயங்களில் தங்கம் முன்னிலை பெற்றே நிற்கும் மற்ற ஆபரண உலோகங்கலோடு ஒப்பிட்டு பார்த்தால்.
தங்கம் வாங்க வேண்டும், அதனை வருங்காலத்திற்கான முதலீடாகவும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள். தங்க நகைகளை வாங்க நினைப்பவர்கள் தங்களது கவனத்தில் கொள்ள வேண்டியது இந்த விஷயங்களும் கூடவே தான்.
தங்கம் கேரட்டின் அளவில் வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், தூய்மையான தங்கமாக இருப்பது 24கேரட் தான். ஆனால் இதனைக் கொண்டு நகைகளை தயாரிக்க முடியாது. இதனால் 24கேரட் தங்கத்தில் செய்யப்பட்ட நகைகள் என சொல்வதை கேட்க நேர்ந்தால், அதனைப் பற்றி அதிகமாக யோசித்து அந்த வணிகத்தை தவிர்த்தலே சிறந்தது.
முக்கோன வடிவிலான பிஐஎஸ் முத்திரை எழுதப்பட்டிருக்கிறதா? என்பதனை நிச்சயமாக பார்க்க வேண்டும். பிஐஎஸ் சான்று என்பது அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டது என்பதோடு பரிந்துரைக்கப்பட்ட தங்கத்தின் அளவினை பூர்த்தி செய்தது என்பதும் அர்த்தம் கூட.
6 இலக்கங்களைக் கொண்ட ஹைச்.ஐ.யூ.டி நம்பர் என்பது ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கத்திலும் தெரியப்படுத்தப்பட்டிருக்கும்.
இந்த எண் நகை உற்பத்தியாளர் மற்றும் ஹால்மார்கிங் மையத்தை கண்காணிக்க உதவும். இதனால் இந்த ஹைச்.ஐ.யூ.டி. எண்களை பார்க்க வேண்டியது கூட தங்க நகை வாங்கும் நேரத்தில் பார்க்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
ஹால்மார்க் லோகோ என்பது தங்க நகைகளில் நகை வியாபாரியின் அடையாளம் மற்றும் ஹால்மார்க்கிங் சென்டர் லோகோவும் இருக்க வேண்டும். பிஐஎஸ் சான்றளிக்கப்பட்ட நகைக்கடைகளுக்கும் நகைகளில் தனித்தனி அடையாளம் இருக்கும். இந்த ஹால்மார்க்கிங் லோகோ நகைகளின் துய்மை சோதிக்கப்பட்டதை குறிக்கவும் செய்கிறது.
தங்க நகை வாங்க நினைப்பவர்கள் இந்த விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தி அதன் பின்னரே பர்சேஸ் செய்வது நல்லாதாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது நிபுனர்களால்.