Connect with us

Cricket

INDvNZ: இந்திய அணி மாற்றங்கள்.. யாரும் இப்படி பண்ண மாட்டாங்க.. சுனில் கவாஸ்கர் விளாசல்

Published

on

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. பூனேவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முகமது சிராஜ், கே.எல். ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சுப்மன் கில் அணியில் இணைந்துள்ளனர். காயம் காரணமாக சுப்மன் கில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்தார். இந்த தொடர் தொடங்கும் முன் அணியில் இடம்பிடிக்காத வாஷிங்டன் சுந்தர், முதல் டெஸ்ட் போட்டி தோல்விக்கு பின் இந்திய அணியில் 16-வது வீரராக சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “இந்திய அணி பேனிக் மோடில் இருப்பதாக தெரிகிறது. காயம் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் அணியில் மூன்று வீரர்களை யாரும் மாற்ற மாட்டார்கள்,” என்று தெரிவித்தார்.

முதலில் பேட் செய்யும் நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். தற்போது வரையிலான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்களை அடித்துள்ளது.

google news