Cricket
மீண்டும் கூப்பிடனுமா? அவரால் தான் பிரச்சினையே.. வார்னரை கிழித்த முன்னாள் பிளேயர்
ஆஸ்திரேலிய அணிக்கு தேவைப்படும் பட்சத்தில் அழைப்பு விடுத்தால், மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராக இருக்கிறேன் என்று டேவிட் வார்னர் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தார். ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் இடையே இந்த ஆண்டு இறுதியில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.
இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் விரும்பினால், சூழல் உருவாகும் பட்சத்தில் மீண்டும் அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார். டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 112 போட்டிகளில் விளையாடி 8786 ரன்களை விளாசியுள்ளார். இதில் 26 சதங்களும், 37 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாடிய கடைசி போட்டியில் டேவிட் வார்னர் அகரைசதம் அடித்து இருந்தார்.
ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புவதாக தெரிவித்து இருக்கும் டேவிட் வார்னரை முன்னாள் மகளிர் ஆஸ்கிரேலிய அணி கேப்டன் லிசா ஸ்டத்லேக்கர் கடுமையாக சாடியுள்ளார்.
“என்னை குழப்பது என்னவென்றால், கடந்த கோடை காலத்தில் இவர் தனக்கு பிரியாவிடை வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். இவரால் தான், தேர்வாளர்கள் அந்த டெஸ்ட் போட்டிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்த தவறினர். இல்லையெனில் அந்த டெஸ்ட் போட்டிகளில் அணிக்கான அடுத்த துவக்க வீரரை உருவாக்கி இருக்கலாம்.”
“இதனால் மேடே அழைப்பு வந்தால், உடனே தொடர்பு கொள்ளுமாறு வார்னர் கூறியிருப்பது பிரச்சினையை சாலையில் இழுத்துத் தள்ளவே செய்யும். அடுத்த ஆண்டு இங்கிலாந்து அணியுடன் விளையாட வேண்டியுள்ளது. இதுவரை நடந்தவையே போதும்,” என்று தெரிவித்தார்.