Connect with us

latest news

மிரட்டலா 3 கேமரா.. பக்காவா போட்டோ எடுக்கலாம்.. ஒன்பிளஸ் அசத்தல்

Published

on

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முற்றிலும் புதிய பிளாக்ஷிப் சீரிஸ்- ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அறிமுக தேதியை சமீபத்தில் அறிவித்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் கேமரா விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி புதிய ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் சீரிசில் ஹேசில்பிலாடு கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இதில் மூன்று கேமராக்கள் இடம்பெற்று இருக்கும். இதில் வழங்கப்படும் கேமரா அல்காரிதம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 சீரிசில் இடம்பெற்றதை போன்றதாகும் என்று கூறப்படுகிறது. இது ஒப்போ இதுவரை வெளியானதில் மிக சிறப்பான ஒன்றாகும்.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் 50MP சோனி LYT-808 சென்சார், OIS, 50MP LYT600 3X பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்படுகிறது. இதில் புதிதாக அப்கிரேடு செய்யப்பட்ட “மல்டி-ப்ரிஸம் ரிப்லெக்ஷன் ஸ்டிரக்ச்சர்” வழங்கப்பட்டு இருக்கிறது. இது பெரிஸ்கோப் அளவை மெல்லியதாகவும், எடை குறைவாகவும் மாற்றியுள்ளது. எனினும், புகைப்படங்களை தெளிவாக பிரதிபலிக்கும்.

ஐபோன் ப்ரோ சீரிசில் பயன்படுத்தப்பட்ட பெரிஸ்கோப் ஸ்டிரக்ச்சர் டிசைன் புதிய ஒன்பிளஸ் 13 சீரிசிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கேமரா சென்சார்கள் மட்டுமின்றி அவற்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

google news