Connect with us

Finance

சூப்பருல்ல தங்கம் இன்னைக்கு…இன்னும் கொஞ்சம் இறங்கி வரலாமா?…

Published

on

Gold

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்து வந்தது. இந்த வாரம் துவங்கியதில் இருந்தே இந்த நிலை தான் காணப்பட்டது. இது தொடர்கதையாகி விடுமோ? என் அச்சம் நகைப்பிரியர்களுக்குள் உருவாகத் துவங்கியது.

சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றை விட இன்று குறைந்துள்ளது. இது ஆபரணப்பிரியர்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளது. நேற்று ஒரு கிராமின் விலை ஏழாயிரத்து முன்னூற்றி நாற்பது ரூபாய் (ரூ.7,340), ஒரு சவரன் ஐம்பத்தி எட்டு எழனூற்றி முப்பது ரூபாயாகவும் (ரூ.58,730/-) இருந்தது.

இன்று கிராமிற்கு ஐம்பத்தி ஐந்து ரூபாயும் (ரூ.55/-), சவரன் ஒன்றிற்கு நானூற்றி நாற்பது ரூபாயும் குறைந்துள்ளது (ரூ.440/-) இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை. இதன் மூலம் ஒரு கிராமின் விலை ஏழாயிரத்து இருனூற்றி என்பத்தி ஐந்து ரூபாயாகவும் (ரூ.7,285/-). ஒரு சவரனின் விலை ஐம்பத்தி எட்டாயிரம் இருனூற்றி என்பது ரூபாயாக (ரூ. 58,280/-) நிர்ணயமானது.

தங்கம் தான் திடீரென விலை குறைந்து  மகிழ்வை ஒரு புறம் அதிகரித்த நேரத்தில் என, நானும் வர்றேன்னு தங்கம் உன் கூடன்னு சொல்லி போட்டி போட்டுக் கொண்டு வெள்ளியும் விற்பனை விலையில் வீழ்ச்சியை கண்டது.

Jewel

Jewel

நேற்று ஒரு கிராம் நூற்றி பன்னிரெண்டு ரூபாய்க்கும் (ரூ.112/-), ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து பன்னிரெண்டாயிரம் ரூபாய்க்கும் (ரூ.1,12,000/-) விற்கப்பட்டு வந்த வெள்ளி கிராமிற்கு இரண்டு ரூபாய் (ரூ.2/-) குறைந்து நூற்றி பத்து ரூபாய்க்கும் (ரூ.110/-), ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கும் (ரூ.1,10,000/-|) விற்பனை செய்யாப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும் திடீரென காட்டியுள்ள இந்த விழ்ச்சி அதிர்ச்சியில் இருந்து வந்த ஆபரணப் பிரியர்களுக்கு  சிறுது ஆறுதலை அளித்துள்ளது.

 

 

google news