Cricket
டொம்முன்னு அவுட் ஆன டாம்!…அடிச்சி தூக்கிய அஷ்வின்…
பெங்களூரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்து அதிர்ச்சியை அளித்தது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி. முதல் இன்னிங்ஸில் நாற்பத்தி ஆறு ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி பரிதாபமாக இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்து விடுமோ? என நினைத்த நேரத்தில் தான் ஸ்ர்பராஸ் கான், ரிஷப் பண்ட் ஜோடி ஆறுதல் தந்து கெளரவமான தோல்வியாக மாற்றினர் மூன்று டெஸ்ட் போட்டிகளை உள்ளடக்கிய தொடரின் முதல் போட்டியில்.
போனது போகட்டும் புத்துணர்வோடு வந்து விளையாடி நியூஸிலாந்தை புரட்டி எடுங்க என ரசிகர்கள் இந்திய அணி ரசிகர்களின் உற்சாகமான வாழ்த்துகளோடு இன்று துவங்கியுள்ளது இரண்டாவது டெஸ்ட் மேட்ச் புனேவில்.
டாஸில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் ராகுல், குல்தீப் ஆகியோர் நீக்கப்பட்டு சுப்மன் கில். வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லாத்தம் 22பந்துகளில் 15ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவிச்சந்திரன் அஷ்வின் பந்துவீச்சில் எல்.பி.ட்பில்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
டாம் லாத்தம் – ரவிச்சந்திரன் அஷ்வின் இருவருக்கு இடையேயான ரேஸில் அஷ்வினே முன்னிலை வகிக்கிறார். இன்றோடு சேர்த்து, இது வரை 9முறை அஷ்வினிடம் தனது விக்கெட்டினை பறிகொடுத்திருக்கிறார் லாத்தம்.
இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸ் மற்றும் அடுத்து நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் மேட்சின் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து மூன்று முறை அடுத்து இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள உள்ள்னர்.
இன்னும் இரண்டு முறை அஷ்வினிடம் தனது விக்கெட்டினை பறிகொடுத்து விட்டால், அஷ்வினிடம் அதிக முறை அவுட் ஆன வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகி விடுவார் டாம் லாத்தம்.
இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை 10முறை அவுட் ஆக்கி சாதனை படைத்துள்ளார் அஷ்வின். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டத்தில் 51 ஓவர்கள் முடிவடைந்திருந்த நிலையில் நியூஸிலாந்து 166 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
கான்வே 76 ரன்களுக்கும், வில்யங் 18ரன்களும் எடுத்த நிலையில் அவுட் ஆனார்கள். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் 19ஓவர்கள் வீசி 48ரன்களை விட்டுக்கொடுத்து 3விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.