Connect with us

Finance

மறுபடியும் மொதல்ல இருந்தா!…தலை காட்டத் துவங்கும் தங்கம் விலை உயர்வு?…

Published

on

மழை காலங்களில் எப்போது மழை பெய்யும், எப்போது வெயில் அடிக்கும் என்பது புதிராகவே இருக்கும். அப்படித் தான் தங்கத்தின் விலையும் இருந்து வருகிறது சில நாட்களாகவே. இந்த வாரத் துவக்கத்திலிருந்து விலை உயர்வினன மட்டுமே சந்தித்து வந்த தங்கத்தின் விலையில் நேற்று சரிவு காணப்பட்டது.

சென்னையில் நேற்று விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு நேற்றைய முன் தினத்தை விட ஒரு கிராமிற்கு ஐம்பத்தி ஐந்து ரூபாயும் (ரூ.55/-), சவரன் ஒன்றிற்கு நானூற்றி நாற்பது ரூபாயும் (ரூ.440/-) குறைந்து ஒரு கிராம் ஏழாயிரத்து இருனூற்றி என்பத்தி ஐந்து ரூபாய்க்கும் (ரூ.7,285/-), ஒரு சவரன் ஐம்பத்தி எட்டாயிரத்து இருனூற்றி என்பது ரூபாய்க்கும் (ரூ58,280/-) விற்கப்பட்டது.

உயர்வுப் பாதையில் மட்டுமே சென்று கொண்டிருந்த தங்கத்தின் விலை நேற்று குறைந்து ஆறுதல் தந்தது நகைப் பிரியர்களுக்கு.

Silver

Silver

இந்நிலையில் இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

நேற்றைவிட இன்று கிராம் ஒன்றிற்கு பத்து ரூபாயும் (ரூ.10/-), சவரன் இன்றிற்கு என்பது ரூபாயும் (ரூ.80/-) அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ஏழாயிரத்து இருனூற்றி தொன்னூற்றி ஐந்து ரூபாய்க்கும் (ரூ.7,295/-), ஒரு சவரனின் விலை ஐம்பத்தி எட்டாயிரத்து முன்னூற்றி அறுபது ரூபாயாகவும் (ரூ.58,360/-) இருக்கிறது.

நேற்று கிராமிற்கு இரண்டு ரூபாயும் (ரூ.2/-), கிலோவிற்கு இரண்டாயிரம் ரூபாயும் (ரூ.2,000/-) குறைந்திருந்த வெள்ளி இன்று கிராமிற்கு மூன்று ரூபாய் (ரூ.3/-) குறைந்து நூற்றி ஏழு ரூபாய்க்கு (ரூ.107/-) விற்கப்படுகிறது. இரு கிலோ பார் வெள்ளி இந்த விலை இறக்கதினையடுத்து இரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,07,000/-) விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை மீண்டும் உயர்வுப்பாதைக்கு திரும்பி இருப்பது ஆபரணப் பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

 

google news