Connect with us

latest news

பேட்டரி 12 மாசம் நிக்கும்.. மாஸ் காட்டும் ப்ளூடூத் மௌஸ்!

Published

on

லாகிடெக் நிறுவனத்தின் M196 ப்ளூடூத் மௌஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ப்ளூடூத் மௌஸ், எந்த ப்ளூடூத் சாதனத்துடனும் அதிவேக கனெக்டிவிட்டி வழங்கும் திறன் கொண்டுள்ளது. இந்த மௌஸின் பாகங்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ப்ளூடூத் மௌஸ் கிட்டத்தட்ட 12 மாதங்கள் வரை பேட்டரி லைஃப் கொண்டுள்ளதாக லாகிடெக் தெரிவித்துள்ளது.

இதில் ப்ளூடூத் LE உள்ளது. இது விண்டோஸ் மற்றும் Mac OS தளங்களில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் லாகிடெக் நிறுவனம் லாகிடெக் பாப் ஐகான் கீஸ் கீபோர்டு மற்றும் மௌஸ் காம்போ அறிமுகம் செய்த நிலையில், தற்போது ப்ளூடூத் மௌஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த மௌஸ் பிரிசைஸ் கண்ட்ரோல், எளிதில் பயன்படுத்தக்கூடியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மௌஸ் மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டு இருப்பதால் எந்த விதமான பையிலும் எளிதில் வைத்துக் கொள்ளலாம் என்று லாகிடெக் தெரிவித்துள்ளது. பேட்டரியுடன் சேர்த்தே இதன் மொத்த எடை 76 கிராம்கள் ஆகும். அசத்தலான டிசைன் கொண்டிருக்கும் லாகிடெக் M196 மௌஸ் வலது கை மற்றும் இடது கை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இருக்கிறது.

இதில் 1000 DPI ஆப்டிக்கல் சென்சார், 2D மெக்கானிக்கல் ஸ்கிரால் வீல் உள்ளது. இதில் ப்ளூடூத் LE உள்ளதால் 10 மீட்டர்கள் வரை வயர்லெஸ் கவரேஜ் வழங்குகிறது. இத்துடன் ஆன்/ஆஃப் பட்டன் வழங்கப்படுகிறது. மௌஸை அழுத்திப்பிடித்தால் பேரிங் மோட் செயல்படுத்தப்படும். இதில் ஒற்றை AA பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 12 மாதங்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

இந்திய சந்தையில் புதிய லாகிடெக் M196 ப்ளூடூத் மௌஸ் விலை ரூ. 1,125 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ப்ளூடூத் மௌஸ் கிராஃபைட், ஆஃப்-வைட் மற்றும் ரோஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ப்ளூடூத் மௌஸ்-க்கு இரண்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *