Connect with us

govt update news

அடடா இத்தனை பொருள்களா..? ரேஷன் கார்டு வைத்திருப்பதற்கு தீபாவளி பரிசு… வாரி வழங்கும் அரசு…!

Published

on

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மிக குறைந்த விலையில் 15 பொருட்களை தொகுப்பாக வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் பயன்பெறுவதற்காக அரசு தரப்பில் இருந்து ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற பல பொருட்கள் வழங்கப்படுகின்றது.

அது மட்டும் இல்லாமல் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கும் ரேஷன் கார்டு மிக முக்கியமாக பார்க்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடி மூலமாக 499 விலையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை திட்டத்தை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

தீபாவளி பரிசாக இந்த சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டிருக்கின்றது. தரமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக அமுதம் பல்பொருள் அங்காடிகள் தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. சென்னை கோபாலபுரம் மற்றும் அண்ணா நகரில் இயங்கி வரும் அங்காடிகள் முதற்கட்டமாக நவீன மயமாக்கப்பட்டு துணை முதல்வர் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வளங்கள் துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

அமுதம் பல்பொருள் அங்காடிகள் நியாயமான விலையில் பொதுமக்களின் பேராதருடன் விற்பனையாகி வருகின்றது. இந்நிலையில் பண்டிகை காலங்களில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் 15 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பில் விற்பனையினை லாப நோக்கம் இல்லாமல் 499 விலையில் அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு என்ற பெயரில் அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்திருக்கின்றார்.

மேலும் இதில் மஞ்சள் தூள், உப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, புளி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வறுகடலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகிய 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு உள்ளது. இந்த மளிகை தொகுப்பினை முதற்கட்டமாக சென்னை, கோபாலபுரம், அண்ணா நகர், பெரியார் நகர் போன்ற பகுதிகளில் அமுதம் மக்கள் அங்காடிகளிலும், அடையாறு, சூளைமேடு, சிந்தாதிரிப்பேட்டை, கலைஞர் கருணாநிதி நகர், நந்தனம் ஆகிய பகுதிகளில் உள்ள 10 அமுதன் நியாய விலைக் கடைகளில் செயல்பட்டு வருகின்றது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *