Connect with us

Cricket

யாரும் எதிர்பார்க்கல, ஏகப்பட்ட டுவிஸ்ட்டு.. BGT-க்கான இந்திய அணி இதுதான்..!

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பை என்ற பெயரில் நடைபெறும் இந்த தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பும் அதீதமாக உள்ளது.

இந்த நிலையில், பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. நேற்றிரவு அறிவித்தது. நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம்பெறவில்லை. இவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ரானா முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் களமிறங்கவுள்ளார். இவருடன் ஆல்-ரவுண்டர் வீரரான நிதிஷ் ரெட்டியும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட் வீரரான அபிமன்யூ ஈஸ்வரனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் விராட் கோலி டாப் ஆர்டரில் உள்ளனர். மிடில் ஆர்டரில் கே.எல். ராகுல் மற்றும் சர்ஃப்ராஸ் கான் உள்ளனர். பும்ரா மற்றும் ராணா தவிர்த்து முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் உள்ளனர்.

சுழற்பந்து வீச்சுக்கு ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். இவர்கள் தவிர முகேஷ் குமார், நவ்தீப் சைனி மற்றும் கலீல் அகமது ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யூ ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

google news