latest news
வெறும் 500 ரூபாய் இருந்தா போதும்… ஆண் குழந்தைகளுக்கான அசத்தலான சேமிப்பு திட்டம்…!
பெண் குழந்தைகளைப் போலவே ஆண் குழந்தைகளுக்கும் தபால் நிலையங்களில் சிறந்த சேமிப்பு திட்டம் இருக்கின்றது. அது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
தபால் நிலையத்தில் பெண் குழந்தைகளுக்கு என்று சிறப்பான சேமிப்பு திட்டம் செயல்பட்டு வருகின்றது. அதுதான் செல்வ மகள் சேமிப்பு திட்டம். இதில் முதலீடு செய்வதில் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதே போல தான் ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் சேமிப்பு திட்டம் தபால் நிலையங்களில் செயல்பட்டு வருகின்றது.
ஆண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களுக்கு இந்த திட்டம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இந்த திட்டம் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். அஞ்சல் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 2015 ஆம் ஆண்டு ஆண் குழந்தைகளுக்கு தொடங்கப்பட்ட சிறுசேமிப்பு திட்டம் தான் செல்வமகன் சேமிப்பு திட்டம். இதில் குறைந்தபட்சம் 500 முதல் அதிகபட்சம் 1,50,000 வரை இந்த திட்டத்தில் சேமிக்க முடியும்.
இந்த திட்டத்தில் 8.5% வட்டி விகிதம் அளிக்கப்படும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். குறைந்தது 15 ஆண்டுகள் வரை இந்த பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்த வேண்டும். பின்னர் ஒவ்வொரு 5 ஆண்டுக்கு முதிர்வோடு சேமிப்பை எடுக்காமல் புதுப்பிப்பு செய்து கொள்ளலாம். அவ்வாறு செய்யும்போது வட்டி மொத்தமாக சேர்த்து வழங்கப்படும்.
குறைந்தபட்சமாக 100 ரூபாய் செலுத்தி இந்த கணக்கை தொடங்க முடியும். மேலும் நிலையான வட்டி விகிதமும் இதில் வழங்கப்படுகின்றது. மற்ற சிறு சேமிப்பு திட்டங்களை விட ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் அதிக வட்டி கிடைக்கின்றது. இந்த திட்டத்தில் 1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வரி விலக்கு வழங்கப்படுகின்றது. பிபிஎன்எஸ் கணக்கை துவங்கி ஆண் குழந்தைகளின் பெயரில் முதலீடு நாம் செய்து கொள்ள முடியும்.
பொன்மகன் சேமிப்பு திட்டத்திற்கு கடன் பெறும் வசதிகளும் உள்ளது. கணக்கு தொடங்கி மூன்றாவது நிதியாண்டில் முதலீடு செய்த தொகையில் 25 சதவீதத்தை கடனாக நாம் பெற முடியும். 36 மாதங்களுக்கு முன்பு இந்த கடனை நாம் அடைக்க வேண்டும். இதற்கு ஒரு சதவீதம் வட்டி வசூல் செய்யப்படுகின்றது.
தபால் நிலையங்களில் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குவதற்கு ஆண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கு நீங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் முகவரி சான்று, ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகிய ஆவணங்களை எடுத்துச் சென்று கணக்கை திறந்து கொள்ளலாம். இந்தியாவில் வாழும் எவராக இருந்தாலும் எந்த இடத்தில் இணைய முடியும்.