Cricket
பாகிஸ்தானிடம் பணிந்த இங்கிலாந்து…தொடரை வென்று அசத்தல்…
இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் ஆடவர் அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டியில் தனது அபாயகரமான ஆட்டத்தால் சொந்த மண்ணில் வைத்தே பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது இங்கிலாந்து.
முல்தானில் நடைபெற்ற இரண்டாது போட்டியில் விஸ்வரூபம் எடுத்து விளையாடிய பாகிஸ்தான் எளிதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் போட்டியின் தோல்விக்கு பிறகு கிடைத்த விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தது பாகிஸ்தான் அணி.
இரு அணிகளும் தலா ஒரு, ஒரு வெற்றி பெற்றிருந்ததால் தொடர் சமன் நிலையில் இருந்தது. கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யக் கூடிய முக்கியமான மூன்றாவது போட்டி ராவல்பிண்டியில் வைத்து நடந்து வந்தது.
முதல் இன்னிங்ஸில் 267 ரன்களைக் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து. பாகிஸ்தான் அணியோ முதல் இன்னிங்ஸில் 344 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. ஏற்கனவே ரன்களில் பாகிஸ்தானை விட பின் தங்கியிருந்த இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை துவங்கியது.
வெறும் 112 ரன்களை மட்டுமே அடித்து பத்து விக்கெட்டுகளையும் பரிதாபமாக இழந்தது இங்கிலாந்து. பாகிஸ்தான் அணியின் நோமன் அலி 6 விக்கெட்டுகளையும், சாஜித் கான் 4 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
மிக இலக்கை எதிர்கொள்ள களமிறங்கிய பாகிஸ்தான் அணி.8ரன் களை எடுத்திருந்த சயிம் அயூப் தனது விக்கெட்டினை இழந்து வெளியேற, அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக் கேப்டன் மசூத் 6 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 23 ரன்களை எடுத்து அதிரடியாக விளையாடினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 3.1 ஓவர்கள் மட்டுமே சந்தித்து வெற்றி இலக்கைஅடைந்தது பாகிஸ்தான். 37 ரன் களுக்கு 1 விக்கெட்டினை மட்டும் இழந்து மிக எளிதாக மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்றதோடு மட்டுமல்லாமல் தொடரினையும், வென்று கோப்பையையும் கைப்பற்றியது, பாகிஸ்தான் அணியின் சவுத் சாகீல் ஆட்ட நாயகனாகவும், சாஜித் கான் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.
இந்த தொடருக்கு முன்னர் பங்களாதேஷுடன் நடந்து டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவி கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை பணியவைத்து வெற்றி பெற்றதன் மூலம் அந்நாட்டு ரசிகர்களை திருப்தி படுத்தியுள்ளது.