Connect with us

Cricket

தோல்வி எதிரொலி.. WTC பாயின்ட்ஸ் டேபிளில் இந்தியா நிலை என்ன தெரியுமா?

Published

on

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களை வெற்றி பெற்று அசத்தியுள்ளன. நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இதேபோல் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளன.

டெஸ்ட் தொடரை பொருத்தவரை நியூசிலாந்து அணி முதல் முறையாக இந்தியாவை எதிர்த்து வெளிநாட்டு களத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் இந்திய அணி கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.

முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த போது, இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி இருந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை பொருத்தவரை நியூசிலாந்து அணி ஐந்தாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து பிசிடி புள்ளிகள் 50 ஆக உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த போதிலும், இந்திய அணி 62.82 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மறுபக்கம் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த வெற்றி காரணமாக பாகிஸ்தான் அணி 33.33 புள்ளிகளுடன் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து அணியும் தோல்வியை சந்தித்த போதிலும் 40.79 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த பட்டியலில் இலங்கை அணி 55.56 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

google news