latest news
6100mAh பேட்டரி, மாஸ் காட்டும் சியோமி போன் – எந்த மாடல்?
சியோமி நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை புதிய டீசர்களை வெளியிட்டுள்ளது. அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், சியோமி 15 ப்ரோ மாடலில் 6100mAh பேட்டரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர புதிய ஸ்மார்ட்போனில் 5x பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, 10x லாஸ்லெஸ் ஜூம் வசதி, கேமராவை சுற்றி செராமிக் அலங்கரிப்பு செய்யப்படுகிறது.
சியோமி 15 மாடலில் 5400mAh பேட்டரி வழங்கப்படுகிறது. இது அந்த மாடலில் வழங்கப்படுவதை விட 790mAh வரை அதிகம். இத்துடன் 15 ப்ரோ மாடலில் சக்திவாய்ந்த லெய்கா ஆப்டிக்கல் ஹை-ஸ்பீடு லென்ஸ் சிஸ்டம் மற்றும் அதிநவீன சியோமி AISP 2.0 பிளாட்ஃபார்ம் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் பிரைமரி கேமரா f/1.44, டெலிபோட்டோ கேமராவில் f/2.0, 5x பெரிஸ்கோப் கேமரா f/2.5 லென்ஸ் வழங்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் சியோமி 14 அல்ட்ரா மாடலில் உள்ளதை போன்ற பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
சியோமி 15 மற்றும் சியோமி 15 ப்ரோ என இரு மாடல்களிலும் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் வழங்கப்படுகிறது. இத்துடன் சியோமி உருவாக்கிய மைக்ரோ-ஆர்கிடெக்ச்சர் ஷெட்யூலர் வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போன் இயக்கத்தை மேம்படுத்தும் திறன் வழங்குகிறது.