latest news
3 லட்சம் வரைக்கும் வட்டியில்லாத கடன்… யாருக்கெல்லாம் கிடைக்கும்…? சூப்பரான திட்டம்…!
பெண்களுக்காக உத்யோகினி என்ற பெயரில் கடன் வழங்கும் திட்டம் ஒன்றை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இது குறித்த தகவலை நாம் விரிவாக பார்க்கலாம்.
பெண்களுக்கான பல்வேறு நல திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அனைத்து துறைகளிலும் பெண்கள் தடம் பதித்து வருவதால் அவர்களுக்கு உதவும் விதமாக பல திட்டங்களை அரசு அறிமுகப்படுத்துகின்றது. அந்த வகையில் பெண்களுக்கான ஒரு சிறந்த திட்டம் தான் உத்யோகினி திட்டம்.
இந்த திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு மூன்று லட்சம் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன. மத்திய அரசால் துவங்கப்பட்டு பெண்களுக்கான சிறப்பான திட்டமாக உத்யோகினி இருக்கின்றது. இந்த திட்டத்தின் மூலமாக பெண்கள் விவசாய நடவடிக்கைகளுக்காகவும் சுய தொழில் துவங்குவதற்காகவும் கடன்களை பெற முடியும்.
உத்யோகினி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடனுக்கு வரம்பாக மூன்று லட்சத்தை மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கின்றது. இந்த வருமானது ஊனமுற்றவர்களுக்கும் விதவைப் பெண்களுக்கும் கிடையாது. சிறு தொழில் ஆரம்பிக்க விரும்பும் பெண்களுக்கு இத்திட்ட மூலம் வழங்கப்படும் கடனுக்கு வட்டி எதுவும் கிடையாது. தொழில் மற்றும் தகுதியை பொறுத்து இந்த கடன் வழங்கப்படுகின்றது.
இந்த திட்டத்திற்கு 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேற்பார்வையில் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை இந்த திட்டத்தில் கடன் பெறும் பெண்களுக்கு வட்டி கொடுக்கப்படுகின்றது. மேலும் சமையல் எண்ணெய் வர்த்தகம் செய்யும் பெண்களுக்கு 3 லட்சம் வரை இந்த திட்டத்தில் கடன் வசதி வழங்கப்படுகின்றது.
இதில் 50 சதவீதம் மானியம் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை சேர்ந்த பெண்களுக்கு கொடுக்கப்படுகின்றது. 3 லட்சம் வரை கடன் வாங்கினால் ஒன்றரை லட்சம் மட்டும் திருப்பி செலுத்தினால் போதுமானது. இதுபோல சிறப்பு பிரிவினரோ அல்லது பொது பிரிவினரோ கடன் பெற்றால் 90 ஆயிரம் வரை மானியம் கொடுக்கப்படுகிறது.
நீங்கள் 2.1 லட்சத்தை திருப்பி செலுத்தினால் மட்டும் போதுமானது. தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த பெண்கள் மாற்று திறனாளிகள் மற்றும் கைம்பெண்களுக்கு உத்யோகினி திட்டத்தில் வட்டியில்லா கடன் வழங்கப்படுகின்றது. 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் அனைவரும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கு வங்கிகளிலும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.