Connect with us

latest news

இந்த ஒரு கார்டு மட்டும் இருந்தா போதும்… சீனியர் சிட்டிசன்களுக்கு எல்லாமே கிடைச்சிடும்…!

Published

on

வயதானவர்கள் அனைவரும் சீனியர் சிட்டிசன் கார்டை மட்டும் விண்ணப்பித்து வாங்கி விட்டால் அனைத்து உதவிகளையும் எளிதில் பெற்றுக் கொள்ள முடியும்.

மத்திய, மாநில அரசுகள் மூத்த குடிமக்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மூத்த குடிமக்களுக்கு, கார்டு வடிவில் ஒரு புதிய அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. மூத்த குடிமக்கள் அரசின் வசதிகள் மற்றும் தள்ளுபடிகளை பெறுவதற்கு இந்த கார்டு முக்கியமானது. சீனியர் சிட்டிசன் கார்டு அல்லது மூத்த குடிமக்கள் அட்டை என்று அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு சான்றிதழாகும்.

இந்த கார்டு வைத்திருப்பவர்கள் மூத்த குடிமகன் என்பதை உறுதிப்படுத்தும். இந்த கார்டு நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு வசதிகளில் அடையாள வடிவமாக செயல்படுகின்றது. இதை காட்டினால் மூத்த குடிமக்களுக்கு அரசு அலுவலகம், ரயில் நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தள்ளுபடி போன்ற சிறப்பு சலுகைகளும் கிடைக்கும்.

மூத்த குடிமக்கள் அட்டைக்கு விண்ணப்பிக்க நீங்கள் சில நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபராக இருக்க வேண்டும். இந்திய குடிமகனாக இருப்பது கட்டாயம். ஒரு நபர் இந்த இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருந்தால் அவர் மூத்த குடிமக்கள் அட்டைக்கு எளிதில் விண்ணப்பிக்க முடியும். இந்த அட்டைக்கு விண்ணப்பிக்க சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ், பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், அரசு மருத்துவமனையின் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும். இது உங்களின் வயதை உறுதிப்படுத்துவதற்கு பயன்படும். இந்த அட்டை சீனியர் சிட்டிசனுக்கு பல்வேறு துறையில் உதவி வழங்கும். மூத்த குடிமக்கள் அட்டையில் பல நன்மைகள் கிடைக்கின்றன.

மூத்த குடிமக்கள் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரயில் டிக்கெட்களில் தள்ளுபடி கிடைக்கின்றது. விமான நிறுவனங்கள், விமான பயணத்தில் சிறப்பு தள்ளுபடியை வழங்கி வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு கவுண்டர்கள் உள்ளது. அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். பல தனியார் மருத்துவமனைகளும் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்குகின்றது.

மேலும் மூத்த குடிமக்களுக்கு வங்கியில் எஸ்டி திட்டங்களுக்கு கூடுதல் வட்டி விகிதமும் கிடைக்கின்றது. அரசின் பல்வேறு திட்டங்களை எளிதில் பெற முடியும். இந்த அட்டைக்கான விண்ணப்ப செயல் முறையை மிகவும் எளிமையானது. உங்கள் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டு அதில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விண்ணப்பம் உறுதி செய்யப்பட்ட பிறகு இந்த அட்டையை பெற முடியும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *