Connect with us

latest news

எக்சைனோஸ் 2200 சிப்செட் கொண்ட கேலக்ஸி S23 Fan Edition – விரைவில் வெளியீடு

Published

on

Samsung-Galaxy-S23

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S23 Fan Edition (FE) மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய ஃபேன் எடிஷன் மாடல் ஜூலை மாதமே அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்றும் கூறப்படுகிறது. கேலக்ஸி S23 சீரிசின் குறைந்த விலை எடிஷனாக புதிய கேலக்ஸி S23 FE மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அனுபவத்தை சற்றே குறைந்த விலையில் வழங்கிடும் நோக்கில் தான் சாம்சங் நிறுவனம் ஃபேன் எடிஷன் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில் உருவாகி வரும் கேலக்ஸி S23 FE மாடலில் ஸ்னாப்டிராகன் பிராசஸருக்கு மாற்றாக சாம்சங் நிறுவனத்தின் சொந்த எக்சைனோஸ் சிப்செட் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கேலக்ஸி S23 FE மாடலில் எக்சைனோஸ் 2200 சிப்செட் வழங்கப்படும் என்றும், ஏ.எம்.டி. ரேடியான் ஜி.பி.யு. கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனும் இது என்று கூறப்படுகிறது. இதே சிப்செட் கேலக்ஸி S22 மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி S22 மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் ஃபிளாக்‌ஷிப் மாடல் ஆகும்.

Samsung-Galaxy-S23

Samsung-Galaxy-S23

சாம்சங் கேலக்ஸி S23 FE எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி S23 FE மாடலில் எக்சைனோஸ் 2200 பிராசஸர், 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP வைடு ஆங்கில் லென்ஸ், 8MP டெலிபோட்டோ லென்ஸ், 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், முன்புறம் 12MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி S23 FE மாடலில் 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த கேலக்ஸி S21 FE 5ஜி மாடல் இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S22 ஃபிளாக்‌ஷிப் மாடலின் ஃபேன் எடிஷன் அறிமுகம் செய்யப்படாத நிலையில், இந்த ஆண்டின் ஃபிளாக்‌ஷிப் கேலக்ஸி S23 FE மாடல் அறிமுகம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

google news