Connect with us

latest news

இந்த நாட்டில் ஐபோன் 16 விற்க தடை- ஏன் தெரியுமா?

Published

on

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய ஐபோன் 16 மாடல் இந்தோனேசிய சந்தையில் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்ட உத்தரவை தொடர்ந்து ஐபோன் 16 விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்தோனேசிய அரசாங்கம் பிறப்பித்த முதலீட்டு திட்டங்களை ஆப்பிள் நிறுவனம் பின்பற்ற தவறியதை அடுத்து, ஐபோன் 16 விற்பைக்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் புதிய ஐபோன் 16 யூனிட்கள் மற்றும் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட மாடல்கள் அனைத்தும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

அரசு அறிவிப்பின் படி இந்தோனேசியாவில் ஐபோன் 16 பயன்படுத்துவது சட்டவிரோதமானது ஆகும். பயனர்கள் இந்த சாதனத்தை வெளிநாட்டில் இருந்து வாங்கி வருவதை தவிர்க்குமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை சாதனம் பயன்படுத்தப்பட்டால், அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தோனேசியாவின் உள்கட்டமைப்புகளில் ஆப்பிள் நிறுவனம் 109 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வேண்டும். எனினும், அந்நிறுவம் சுமார் 95 மில்லியன் டாலர்களையே முதலீடு செய்துள்ளது. மீதமுள்ள 14 மில்லியன் டாலர் முதலீடு செய்ய தவறியதை அடுத்து இந்தோனேசிய தொழில்துறை அமைச்சகம் தடை நடவடிக்கையை எடுத்துள்ளது.

முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் சான்றிதழ் புதுப்பிப்பு தேவையான முதலீடுகள் செய்யப்படாத காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக இந்தோனேசிய அமைச்சர் குமிவாங் கர்டசாஸ்மிதா தெரிவித்து இருந்தார். இந்த வரிசையில், தான் தற்போது தடை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

google news