govt update news
ஆதார் கார்டு மட்டும் இருந்தா போதும்… இனி ஈசியா பணம் அனுப்பலாம்…!
நம்முடைய ஆதார் கார்டை வைத்தே நாம் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். அது எப்படி என்பதை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியர்களுக்கு மிக முக்கியமான ஆவணம். அரசின் நல திட்டங்களை பெறுவதற்கும் வங்கி சேவைகளை பெறுவதற்கும் ஆதார் கார்டு முக்கியமாக பார்க்கப்பட்டது. ஆதார் கார்டை பயன்படுத்தி நாம் ஆன்லைனில் பணம் எடுக்கவும், பெறவும் முடியும். ஆதார் கார்டு பணம் செலுத்தும் வசதியை மட்டுமல்ல. பணத்தை மாற்றுவதற்கான விருப்பத்தையும் கொடுத்துள்ளது.
கொடுப்பனவு ஆணையத்தால் (NPCI) கட்டண முறை வழங்கப்படுகின்றது. இது ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை அல்லது ஏஇபிஎஸ் என்று அழைக்கப்படுகின்றது. ஆதார் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கு ஏஇபிஎஸ் கட்டண முறையின் பலனை இந்திய தேசியக்கொடுப்பனவு ஆணையம் கொடுக்கின்றது. இது ஒரு வகையான அடிப்படை வங்கி மாதிரி ஆகும்.
இதன் மூலம் எந்த ஒரு வங்கியின் வணிக அதிகாரி மூலமாகவும், டிஜிட்டல் முறையில் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்ட பயனர்கள் ஏஇபிஎஸ் கட்டண வசதியை பெற முடியும். இதற்கு மைக்ரோ ஏடிஎம் அல்லது மொபைல் ஆப் தேவையானது. இதற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் நம்பர், வங்கியின் பெயர், பரிவர்த்தனை வகை, பையோமெட்ரிக் தகவல் போன்றவை ஆகும்.
இதனை பயன்படுத்தி நம்மால் பணத்தை எடுக்கும் வசதி, பணத்தை டெபாசிட் செய்யும் வசதி, கட்டண பரிவர்த்தனை வசதி மற்றும் சி2ஜி கட்டண வசதி, பேலன்ஸ் சரி பார்ப்பு வசதி போன்றவற்றை எளிதில் பார்க்க முடியும். ஆதார் கார்டு மூலமாக டிஜிட்டல் பணம் செலுத்தும் சேவையை பெற நீங்கள் வங்கி அதிகாரியிடம் செல்ல வேண்டும்.
உங்களுக்கு தேவையான ஆதார் இணைக்கப்பட்ட கட்டண முறையின் அனைத்து சேவைகளையும் இங்கு நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். ஓபிஎஸ் என்பது மூலமாக பணத்தை எடுத்தல் அல்லது மாற்றுதல் போன்ற வசதிகளை எளிதில் செய்யலாம். ஆதார் கார்டை காண்பிப்பதன் மூலம் பயோமெட் விவரங்கள் மூலம் வங்கி இருப்பை சரி பார்ப்பது ஏடிஎம் கார்டு இல்லாமல் பணத்தை எடுப்பது போன்ற வசதிகளை பெற முடியும்.