automobile
இணையத்தில் வெளியான 2023 கே.டி.எம். 390 டியூக் ஸ்பை படங்கள்
2023 கே.டி.எம். 390 டியூக் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
தற்போதைய ஸ்பை படங்களில் உள்ள யூனிட் கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாரான நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. இந்த மாடலின் ஒட்டுமொத்த பாடிவொர்க் மற்றும் சில்ஹவுட் தோற்றங்களும் இதையே உணர்த்துகின்றன. அடுத்த தலைமுறை மாடல் என்ற வகையில், 390 டியூக் மாடலில் சற்றே அதிரடியான டிசைன் வழங்கப்பட்டு உள்ளது.
இதன் பெட்ரோல் டேன்க் மேல்புறம் சற்றே பெரியதாக இருக்கும் என்று தெரிகிறது. இதன் ஹெட்லைட் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இது சற்றே டுவீக் செய்யப்பட்டு, செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கும். இத்துடன் பூமராங் போன்ற எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்படுகின்றன. மிரர்களும் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.
புதிய 2023 கே.டி.எம். 390 டியூக் மாடலின் பின்புறம் புதிய சப்-ஃபிரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த மாடலின் மோட்டாரும் சற்றே டுவீக் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. தற்போதைய மாடலில் சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு 373சிசி, மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 42.9 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
2023 கே.டி.எம். 390 டியூக் மாடலில் வித்தியாசமான டியூனிங் மற்றும் உள்புற அம்சங்கள் ஆல்டர் செய்யப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்பை படங்களின் படி புதிய மாடலில் டூயல் ரேடியேட்டர் ஃபேன் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது 2023 கே.டி.எம். RC 390 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. இது மோட்டார்சைக்கிளில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும் நோக்கில் வழங்கப்பட்டு இருக்கிறது.
எல்.இ.டி. இலுமினேஷன் தவிர, கே.டி.எம். நிறுவனம் புதிய 390 டியூக் மாடலில் டி.எஃப்.டி., ஏ.பி.எஸ்., குயிக்ஷிஃப்டர், டிராக்ஷன் கண்ட்ரோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் ஹார்டுவேர் அம்சங்களும் புதிய RC மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.
அந்த வகையில், இந்த மாடலின் முன்புறம் WP USD ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இதன் முன்புற டிஸ்க் பிரேக் அளவில் பெரியதாகவும், டியூக் சூப்பர்ஸ்போர்ட் மாடல்களில் உள்ளதை போன்றும் காட்சியளிக்கின்றன. இத்தனை அப்டேட்கள் காரணமாக 2023 கே.டி.எம். 390 டியூக் மாடலின் விலை தற்போதைய மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
தற்போதைய கே.டி.எம். 390 டியூக் மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 2 லட்சத்து 97 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுகம் செய்யப்பட்டதும், இந்த மாடல் பி.எம்.டபிள்யூ. G310 R மற்றும் ஹோண்டா CB300 R மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
Photo Credit: Bikewale | Anil Ambre